பிக் பாஸ் சீசன் 6 விரைவில் விஜய் டிவியில் ஓளிபரப்பாக போகிறது. ஐந்து சீசன்களை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன் தான் இதையும் தொகுத்து வழங்குகிறார்.
பிக் பாஸ் 5 சீசன்கள் வரை மட்டுமே விஜய் டிவியில் ஓளிபரப்பாகும் அடுத்தடுத்த சீசன்கள் வேறு சேனல்களில் ஓளிபரப்பாகும் என்ற வாய் உலறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி பிக் பாஸ். உலகநாயகன் கமல் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சி இதுவரை 5 வது சீசன்கள் நிறைவு செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஜூன் மாத இறுதி அல்லது ஆகஸ்ட் மாதத்தில் 6வது சீசன் தொடங்கும் என சொல்லப்பட்டு வருகிறது.
உலக நாயகனின் திரைப்படமான விக்ரம் வெளியாகி உள்ள நிலையில் விஜய் டிவி இது தொடர்பாக கமலிடம் பேசியுள்ளது. அவரும் அதற்கு பார்த்துக்கலாம் என அவர் பானியில் கூறியிருக்கிறார்.
தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சி போலவே தெலுங்கிலும் பிக் பாஸ் நிகழ்ச்சி 5 நிறைவுற்றுள்ளது. அதற்கு தமிழிலும் தெலுங்கிலும் முன்னனி நடிகையாக நடித்து வரும் சமந்தாவை நிகழ்ச்சி தொகுப்பாளராக அமைக்க பேசி வருவதாக தகவல் வந்துள்ளது.
தமிழில் பிக் பாஸ் என்றால் உலக நாயகன் தான் என்ற அளவிற்கு பிரபலம் அதை அடுத்த 6 வது சீசனிலும் தொகுப்பாளராக இருப்பார் என்பது உறுதியாகி உள்ளது குறிப்பிடத் தக்கது.