Bigg boss 6: விஜய் டிவியில் ஓளிப்பரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பல கோடி ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சி 5 சீசன்களை முடித்து 6 வது சீசனை தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தி வந்த நிலையில் இறுதி போட்டியாளராக வெளியேற்றப்பட்ட மைனா நந்தினி 103 நாட்கள் இருந்துள்ளார். இவர் பெற்ற பெற்ற சம்பள விவரத்தை அறிய பலரும் காத்திருக்கும் நிலையில் அதை பற்றி இப்பதிவில் அறியலாம்.
இந்த சீசனில் முதன் முறையாக 21 நபர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஓவ்வொரு வாரமும் மக்கள் அளிக்கும் குறைவான ஓட்டுகளின் அடிப்படையில் ஓருவர் வெளியேற்றப்படுவார். இந்த சீசனில் முதன் முறையாக பணப்பெட்டியை வைத்ததுமே சற்றும் யாரும் எதிர்பார்க்காத நிலையில் தொலைக்காட்சி தொகுப்பாளர் விஜே கதிரவன் அந்த பணப்பெட்டியில் இருந்த மூன்று லட்சத் தொகையுடன் வெளியேறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

மீதமிருந்த விக்ரமன், ஷிவின், அசீம், அமுதாவாணன், நந்தினி பினாலே வரை செல்ல திட்டமிட்டிருந்தனர். ஆனால் பிக்பாஸ் அப்போது முதன் முறையாக இரண்டாவது முறையாக பணப்பெட்டியை வைத்து ரசிகர்களையும் பிக்பாஸ் ஹவுஸ்மெட்டுகளையும் ஆச்சரியப்படுத்தினார்.
இந்த நிலையில் 11.75 லட்சம் வந்ததும் அமுதவாணன் எடுத்து கொண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். இதனால் 15 லட்சம் வந்ததும் எடுத்து செல்லலாம் என திட்டமிட்டுருந்த மைனாவிற்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்நிலையில் இரவோடு இரவாக பிக்பாஸ் வீட்டிலிருந்து இறுதி ஆளாக வெளியேற்றப்பட்டார் மைனா.
இதனால், பிக்பாஸ் பினாலேவிற்கு அசீம், விக்ரமன், ஷிவின் மூவரும் தகுதி பெற்றனர். இறுதி நாட்களில் டைட்டில் வின்னர் யாராக இருக்க கூடும் என அனைவருக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்து வந்த நிலையில் அசீம் டைட்டில் வின்னரை தட்டி சென்றார்.
இதையும் படியுங்கள்: BIGG BOSS 6 TAMIL: அமுதவாணன் பெற்ற மொத்த சம்பள விவரம்
பிக்பாஸ் வீட்டில் 103 நாட்கள் இருந்து வந்த மைனாவிற்கு ஒரு நாளைக்கு 25,000 முதல் 28,000 வரை சம்பளமாக பெற்றதாக கூறப்படுகிறது. ஒரு நாளைக்கு 25,000 என பார்த்தால் 100 நாட்களுக்கு, 25,00000 லட்சத்துடன் வெளியேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற தகவல்களுக்கு தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.