Bigg Boss 6: அனைவரையும் கவர்ந்த அமுதவாணன் எம்.ஆர்.ராதா வேடம். பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 5 சீசன்களை வெற்றிகரமாக முடித்து தற்போது ஆறாவது சீசன் நடந்து வருகிறது. தற்போது 60 நாட்களை கடந்து சென்று கொண்டுள்ளது. தினமும் தினமும் டாஸ்க் நித்தம் சண்டை என ஹவுஸ்மெட்டுகள் செய்யும் செயல்களை பார்த்து ரசிகர்கள் வியந்தும் பாராட்டியும் வாக்குகளை வழங்கி வருகின்றனர்.
இந்த சீசனில் 21 நபர்கள் இடம் பெற்றனர். அதில் ஜி.பி.முத்து, அசல்கோலார், சாந்தி, மகேஸ்வரி, ஷெரினா, ராபர்ட் மாஸ்டர் இறுதியாக குயின்சி என குறைந்த வாக்குகளை பெற்றவர்களை வெளியேற்றினார் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் உலக நாயகன் கமல்.
கட்சி பணிகள், சினிமா பணிகள் என பிசியாக இருந்த போதிலும் இந்த நிகழ்ச்சியின் முதலிருந்து தற்போது வரை இவரே தொகுப்பாளராக இருந்து வருகிறார். இப்போது பிக்பாஸ் வீட்டில் 13 மட்டுமே இருந்து வருகின்றனர். இந்த வாரம் இரண்டு பேர் எலிமினேட் செய்யவுள்ளதையும் கூறி விடை பெற்றார் கமல். இதனை தொடர்ந்து தனது திறமைகளை காட்டி ரசிகர்களிடம் வாக்குகளை சேகரிக்க ஹவுஸ்மெட்டுகள் களம் இறங்கினர்.

இந்த வார நாமினேட் லிஸ்டில் இருப்பவர்கள் ஆயிஷா, ஜனனி, கதிரவன், அசிம், ஏடிகே, ராம். இதனால் மாறுவேடப் போட்டியில் டாஸ்க்குகள் வழங்கப்பட்டது. அதில் அமுதவாணன் மற்றும் அசீம் இருவருக்கும் கச்சிதமாக பொருந்தும் அளவில் அவர்களது வாய்ஸ் அமைந்து ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகின்றனர்.
பொங்கலை வெளுத்துக் கட்டிக் கொண்டிருந்த ஏடிகே மற்றும் ராமிடம் சென்று யப்பா.. டேய். பொங்கல் என்னா நல்லாவா இருக்கு செங்கல் மாதிரி இருக்கு. இப்படி ரவுண்டு கட்டி சாப்பிடறீங்க? என்று அமுதவாணன் நக்கலடித்துக் கொண்டிருந்தார். பிறகு சமையல் அணியைச் சேர்ந்த ரச்சிதாவிடமும் சென்று பொங்கலைப் பற்றி கமெண்ட் செய்து பங்கம் செய்தார் அமுதவாணன்.
பாத்ரூம் மூலையில் அமர்ந்திருந்த அமுதவாணனை மெல்லிய அதிர்ச்சியுடன் வந்து பார்த்தார் அசிம் இப்போது என் நிலைமையைப் பார்த்தாயா. கணேசா என்று பிக் பாஸ் வீட்டின் பாலிட்டிக்ஸையும் கலந்து அமுதவாணன் அவ்வப்போது கிண்டலடித்தது சிறப்பு.
இதையும் படியுங்கள்: பாட்ஷா படபாடலில் ரஜினி குறித்து மனம் திறந்த தேனிசைத் தென்றல் தேவா
இது போன்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை நாடுங்கள்.