BIGG BOSS 6: விஜய் டிவியில் ஓளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஏடிகேவை வெளியேற்றி விடுவேன் என எச்சரித்த பிக்பாஸ். அப்படி என்ன செய்தார் என்ற கேள்வி எழுந்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியை அதிகபடியான மக்கள் பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சி 5 சீசன்களை முடித்து 6 வது சீசன் நடைபெற்று வருகிறது.
இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதன் முறையாக 21 பேர் பங்கு பெற்றனர். 90 நாட்களை கடந்து வரும் இந்த நிகழ்ச்சியில் இறுதி கட்டத்தை நெருங்கி கொண்டு இருக்கின்றது. இதனால் போட்டிகளும் கடுமையாக இருந்து வருகிறது. இதில் டைட்டில் வின்னர் யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் மக்களிடம் இருந்து வருகிறது.
ஏற்கனவே, ஜி.பி.முத்து, அசல்கோலார், ஷெரினா, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், சாந்தி, மகேஸ்வரி, ராம், ஆயிஷா, தனலட்சுமி, ஜனனி, மணிகண்டா உள்ளிட்ட பிக்பாஸ் பிரபலங்கள் வெளியேற்றப்பட்ட நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டில் அசீம், விக்ரமன், ஏடிகே, கதிரவன், அமுதவாணன், ரச்சிதா, மைனா, ஷிவின் உள்ளிட்டவர்கள் விளையாடி வருகின்றனர்.

இந்த வாரம் முதன் முறையாக தினேஷ் கனகராஜ் கேப்டன் பதவிக்கான போட்டியில் வெற்றிப் பெற்று கேப்டனாக இருந்து வருகின்றார். இவருக்கு சிறுநீரகத்தில் கல் பிரச்சனையுடன் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் மருத்துவ சிகிச்சையும் மேற்கொண்டு இருந்து வருகிறார்.
இந்நிலையில், பிக்பாஸ் சீசனில் முதல் சீசன் முதலே ஸ்மோக்கிங் ரூம் இருந்து வருகிறது. இதை இது நாள் வரை மக்களிடம் காட்டியதே கிடையாது. இலங்கையை பூர்வீகமாக கொண்டு இந்த சீசனில் ஆரம்பம் முதலே இருந்து வரும் தினேஷ் கனகராஜ் ஸ்மோக் செய்வதை வழக்கமாக செய்து வருகிறார்.
தற்போது, சீறுநீரக பிரச்சனைகள் உள்ள நிலையில் மருத்துவர்கள் புகைப்பிடிப்பதை முற்றிலுமாக தவிர்க்க கூறியுள்ளனர். ஆனால், அதை கொஞ்சமும் காதில் போட்டுக் கொள்ளாத இவர் புகைப்படித்து வந்துள்ளார் இதை பார்த்த பிக்பாஸ் மருத்துவர் கூறியது போல் இருந்தால் இருங்கல் இல்லையெனில் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்படுவீர்கள் என எச்சரித்துள்ளார்.
இதையும் படியுங்கள்: BIGG BOSS 6: ரச்சிதா எனக்கு போலியாகதான் தெரிகிறார் அசீம்
இது போன்ற தகவல்களுக்கு தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.