BIGG BOSS 6: பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் மிக பிரபலாமான நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்களை வெற்றிகரமாக முடித்து 6 வது சீசன் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் 21 பேர் ஹவுஸ்மெட்டுகளாக களம் இறங்கினர். முதல் நபராக தன் குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்க முடியவில்லை என்று கூறி ஜி.பி.முத்து வெளியேறினார்.
தொடர்ந்து வாரவாரம் ஓரு நபர் ரசிகர்கள் அளிக்கும் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் வெளியேற்றப்படுவர். அந்த வகையில் அசல்கோலார், நிவாஷினி, சாந்தி, குயின்சி, ராபர்ட் மாஸ்டர், மகேஸ்வரி, ராம், ஆயிஷா என வெளியேறியுள்ளனர். கடந்த வாரம் 2 எலிவினேஷன் லிஸ்ட்டில் ராம், ஆயிஷா வெளியேறினர்.
தற்போது இந்த வார நாமினேட் லிஸ்டில் அசீம், விக்ரமன், ஏடிகே, ஜனனி, ரச்சிதா, மணிகண்டன் இருக்கின்றனர். இவர்களில் அதிக ஓட்டுகளை பெற்று அசீம் முதல் இடத்திலும் அதற்கு அடுத்த இடத்தில் விக்ரமனும் உள்ளனர். இந்த நிலையில் இந்த வாரம் குறைந்த வாக்குகளை பெற்றுள்ள ஏடிகே அல்லது ஜனனி வெளியேற்றப்படலாம் என தெரிகிறது.

இந்த வார டாஸ்கில் அனல் பறக்க சண்டை சத்தங்களுக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது இல்லை. சொர்கவாசிகள் நரகவாசிகள் என டாஸ்க்குகளுக்கு தனிதனியாக பிரிக்கப்பட்டு இருந்தனர். இதில் ஏடிகேவுக்கும் அசீமுக்கும் சண்டை வலுத்தது அதைபோல விக்ரமனுக்கும் ஷிவினுக்கும் சண்டை முற்றியது. ஓவ்வொரு டாஸ்கின் போதும் எதிர்பாரா விதமாக சண்டையுடனே முடிந்து வருகிறது பிக்பாஸ் நிகழச்சி.
இந்நிலையில் 67 நாட்களை கடந்து ஹவுஸ்மெட்டுகள் பிக்பாஸ் வீட்டில் இருந்து வருகின்றனர். இந்த சீசனில் யார் இறுதி போட்டியாளராக இருப்பார் யார் வெல்லுவார்கள் என்று குழப்பமான முடிவே உள்ளது.
இதையும் படியுங்கள்: பிக்பாஸ் 6 தமிழ்: அசீம் ஏடிகே இடையே வாக்குவாதம் மோதல்
இந்த வாரம் ஜனனி அல்லது ஏடிகே குறைந்த வாக்குகளின் அடிப்படையில் வெளியேற்றப்படலாம் என கருதப்படுகிறது.
இது போன்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை படியுங்கள்.