பிக் பாஸ் 6: இன்றைய ப்ரோமோ பற்றிய சுவாரசிய தகவல்கள்

0
22

பிக் பாஸ் 6: இந்த வாரம் ஜி.பி.முத்து BIGG BOSS வீட்டின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று வெளியான ப்ரோமோவில் அசல் கோலார் மற்றும் தனலட்சுமி இருவரும் சண்டை காட்சிகள் இடம் பெற்று ரசிகர்களை பார்க்க ஆவலை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் தொடர் தொடங்கி இன்றுடன் 11 வது நாளை கடந்து சென்று கொண்டுள்ளது. முதல் முதலே அசல் கோலார் பெண்களை சீண்டுவதை தொடர்ந்து வருகின்றார் என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகின்றது. ஓருமுறை குயின்சி விக்ரமனுடன் நடந்த விஷயங்களை பற்றி பேசி கொண்டுள்ள போது மன கோலாரான அசல் கோலார் குயின்சியின் கையை பிடித்து தடவிக் கொண்டே இருந்தார்.

குயின்சி அதை வெறுத்தும் திரும்பவும் அது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தது ரசிகர்களை கோபம் அடைய செய்தது. எப்பொழுதும் பெண்கள் உடனே இருப்பது போன்றே தோன்றுகிறார். 40 நாட்கள் கடந்த பிறகு எழ வேண்டிய சண்டைகள் அனைத்தும் இப்போதே ஆர்ம்பித்து விட்டதாக உலக நாயகனும் சொல்லி இருந்தார்.

பிக் பாஸ் 6: இன்றைய ப்ரோமோ பற்றிய சுவாரசிய தகவல்கள்

இன்றைய ப்ரோமோவில் அசல் கோலாரை சரமாறியாக தனலட்சுமி திட்டுவதை பார்த்த ரசிகர்கள் தனலட்சுமிக்கு ஆதரவு கரம் நீட்டி வருகின்றனர். ஓரு பக்கம் ஜி.பி.முத்து அந்த பிக்பாஸ் வீட்டையே நகைச்சுவையால் கல்க்கி வருகின்றார். தன் இயல்பான பேச்சாலும் தன் அறியாமையாலும் ரசிகர்களின் மனதை கவர்ந்து வருகின்றார். எப்படி இருந்தாலும் காரியத்தில் கன்னியமாக நடந்து கொள்கிறார். தனக்கான வேலைகளையும் டாஸ்குகளையும் சரிவர செய்து ரசிகர்களை கவர்ந்து வருகின்றார்.

இந்த வார எலிமினேஷன் லிஸ்டில் ஆயிஷா, அசீம், தனலட்சுமி, மகேஸ்வரி, நிவா, குயின்சி, ரச்சிதா, ராம், சாந்தி, ஷெரினா, ஷிவின், விக்ரமன் ஆகியோர் உள்ளனர்.

இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவருக்கும் ஒரு டாஸ்க் வழங்கப்படுகிறது. அதன் பெயர் ஒரு கத சொல்லட்டுமா? அதில், போட்டியாளர்கள் அனைவருக்கும் ஒரு நிமிடம் வழங்கப்படுகிறது அதற்குள் அவர்கள் வீட்டில் உள்ள மற்ற போட்டியாளர்களை கவரும் வகையில் கதையை கூற வேண்டும் அவ்வாறு கூறவில்லை என்றால் ப்ளாஸ்மா முன்பு உள்ள 3 பசர்களை அழுத்தி கதைய நிறுத்திவிடவும் செய்யலாம்.

இந்நிலையில் இன்று 11-வது நாளிற்கான முதல் ப்ரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. அதில், இன்றைய நாளிற்கான ஒரு கதை சொல்லட்டுமா டாஸ்கில் ஆயிஷா, ரக்சிதா, குயின்சி, சாந்தி, விக்ரமன் மற்றும் மணிகண்டன் ஆகியோர் கதை கூறுகின்றனர்.

இதையும் படியுங்கள்: பிக்பாஸ் சீசன் 6: போட்டியாளர்களின் ஓருநாள் சம்பளம் பற்றிய தகவல்

அவர்களை கதை சொல்லவிடாமல் போட்டியாளர்கள் பசரை அழுத்தி நிறுத்துகின்றனர். அப்போது விக்ரமன் பேச ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே மற்ற போட்டியாளர்கள் அவரை பேசவிடாமல் நிறுத்தினார்கள். அதே சமயம் விக்ரமன் வரும்போது அனைவரும் கைதட்டினார்கள்.

இதனை பார்த்த ஜிபி முத்து பேசவும் விடமாட்ரீங்க, கையும் தட்றீங்க யாருப்பா நீங்களாம் எங்க இருந்துபா வந்துருக்கீங்க என்றும் கிண்டலடிக்கும் வீடியோ வெளியாகி சிறப்பை பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here