BIGG BOSS 6: பிக்பாஸ் நிகழ்ச்சியை விஜய் டிவி நடத்தி வருகிறது. இந்த நிகழ்ச்சி தொடர்ந்து மக்களிடம் ஆதரவும் வரவேற்பும் பெற்று வருவதால் இதுவரை 5 சீசன்களை முடித்து தற்போது 6வது சீசனை தொடர்ந்து நடத்தி வருகிறது. முதன் முறையாக இந்த சீசனில் 21 பேர் ஹவுஸ்மெட்டுகளாக பிக்பாஸ் வீட்டிற்குள் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சிக்கு வாக்களிக்கும் மக்களே யார் வெற்றியாளர் என்பதை தீர்மானிப்பர்.
இந்த சீசனில் சிறப்பான முறையில் யாருக்கும் எந்த வித பாதகமும் இல்லாமல் தனது விளையாட்டை யார் நன்றாக விளையாடுவார்களோ அவரே டை்டடில் வின்னராக இருப்பார் அதுவும் மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையிலேயே அறிவிக்கப்படும்.
ஓவ்வொரு வாரமும் குறைந்த வாக்குகளை பெற்ற பிக்பாஸ் உறுப்பினர்கள் ஓருவர் பின் ஓருவராக வெளியேற்றப்படுவர். தற்போது, 21 பேரில் விக்ரமன், அசீம், ஷிவின், அமுதவாணன், ஏடிகே, கதிரவன், ரச்சிதா, மைனா நந்தினி உள்ளனர். இவர்களில் சேவ் சோனில் இருந்து வருபவர் ரச்சிதா மீதமுள்ளவர்கள் இந்த வார நாமினேட் லிஸ்டில் உள்ளனர்.

இவர்களில் மிகவும் டேன்ஜர் சோனில் இருப்பவர்கள் மணிகண்டன், அசீம், கதிரவன் ஆகியோர் இருக்கின்றனர். இந்த நிலையில் 85 நாட்களை கடந்து இந்த தொடர் சென்றுக் கொண்டு உள்ளது. அதனால் ரசிகர்களுக்கு யார் இந்த டைட்டில் வின்னராக இருப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
இந்நிலையில், நேற்றைய எபிசோடுக்கான இரண்டாவது ப்ரோமோவில், ரச்சித்தா மைக்கின் முன் அமர்ந்து, அசீம் எப்போதுமே அடுத்தவர்களை அழுக்கிவிடக்கூடிய நபராக இருக்கிறார் என்றார். ரச்சித்தாவின் பேச்சால் கடுப்பான அசீம், தயவு செய்து என்னை பற்றி அப்படி சொல்லாதீங்க நான் யாரையும் அமுக்கவில்லை. அப்படிப்பார்த்தால், சனிக்கிழமை ஆன மட்டும் ரச்சித்தாவிற்கு புதிய தைரியம் எங்கிருந்து வருகிறது.
கமல் சார் முன்னாடி அவ்வளவு தைரியமாக பேசும் ரச்சித்தா என்னிடம் இதைப்பற்றி இதுவரை ஒருநாள் கூட பேசியதே இல்லையே . கமல் சார் முன்னாடி மட்டும் தைரியமாக பேசும் ரச்சித்தாவை பார்க்கும் போது எனக்கு போலியாகத் தெரிகிறது என தனது மனதில் இருப்பதை முகத்திற்கு முன்னாலே சும்மா கிழிகிழியென கிழித்து உள்ளார். அசீமின் இந்த கேள்விக்கு ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்: BIGG BOSS TAMIL 6: இந்த வாரம் வெளியேறுபவர் இவரா இருக்குமோ?
இது போன்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.