பிக்பாஸ் 6: விஜய் டிவில் பிரபலமான நிகழ்ச்சிகளில் முதலாவது இடம் பிடித்து அனைவரது மனதையும் கவர்ந்து வரும் நிகழ்ச்சியாக இருப்பது பிக்பாஸ் இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக ஐந்து சீசன்களை முடித்து தற்போது ஆறாவது சீசனை நடத்தி வருகின்றது. ஓவ்வொரு சீசனிலும் பல மாற்றங்கள் கொண்டு வந்து வீட்டில் உள்ளவர்களுக்கும் பார்க்கும் ரசிகர்களுக்கும் பிடிக்கும் வண்ணம் அமைந்து இருக்கும் நிகழ்ச்சி இந்த நிகழ்ச்சியை ஆரம்பம் முதலே உலக நாயகன் தொகுத்து வழங்கி வருகின்றார்.
இந்த 6 வது சீசனில் முதல் நாளில் 20 நபர்கள் வீட்டிற்குள் அனுமதிக்கப்பட்டனர். ஓரு வாரம் கழித்து மைனா நந்தினி வயில்டு கார்டு முறையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக தானே பிக்பாசிடம் கூறி ஜி.பி.முத்து முதல் ஆளாக வெளியேறினார்.

அடுத்ததாக மன்மத லீலையில் ஈடுபட்டு வந்த அசல் கோலாரை ரசிகர்கள் கழுவிகழுவி ஊற்றி வெளியேற்றினர். இந்த வாரம் யாரை வெளியேற்று வார் கமல் என்ற ஆவல் சூழ்ந்து வந்த சூழலில் ஷெரினா மற்றும் ஆயிஷா என்று ரசிகர்கள் முன்வைத்திருந்னர். அதில் ஆயிஷா என்னை விட்டுடுங்க நான் போறேன் என்று முனங்கி கொண்டே இருந்தார். ஆனால், நல்வாய்பாக அவரை வெளியே அனுப்பவில்லை.
இதையும் படியுங்கள்: பிக்பாஸ் சீசன் 6: அனைவரது மனதையும் கவர்ந்த விக்ரமன்
மாறாக மலையாளத்திலும் ஆங்கிலத்திலும் வீட்டிற்குள் வேறு மொழியில் பேசும் ஷெரினாவை வெளியேற்றினார் கமல். முதன் முறையாக தமிழ் நடத்தப்படும் நிகழ்ச்சியில் ஷெரினா என்று எழுதப்பட்ட மலையாள பெயர் அட்டையை காட்டி வெளியேற்றினார் கமல்.
உலக நாயகன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஷெரினாவை பார்த்து மைக்கை மறைத்து வைத்து விட்டு குசுகுசு வென்று பேசுகிறீர்கள் அதுமட்டும் அல்லாது வேறு வேறு மொழிகளில் உரையாற்றுகிறீ்ர்கள் நான் கூட மலையள படங்களில் நடித்துள்ளேன் இந்தியில் நடித்துள்ளேன் அதனால் மலையாளியாகவோ வடநாட்டினராகவோ இருந்திருக்கலாம்.
இது ஓரு மிகப் பெரிய வாய்ப்பு உங்கள் திறமையை மேடை போட்டு காட்ட உங்களுக்கு தரப்பட்ட மேடை அதை நீங்கள் சரியாக பயன்படுத்தினால் வெற்றி நிச்சயம் என்பதை உணர்ந்து செயல்படுங்கள் என்றும் கமல் எச்சரித்தார். நான் வாழ்ந்த காலகட்டத்தில் இது போன்ற நிகழ்ச்சிகள் இல்லேயே என்றும் பலபேர் நினைத்து வருகின்றனர்.
இறுதியாக பிக்பாசை விட்டு ஷெரினா வெளியேற்றப்பட்டார். அடுத்ததாக பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கு பலகாரக் கடை டாஸ்கை கொடுத்து அசத்தினார்.
இது போன்ற பல தகவல்களை அறிந்து கொள்ள தலதமிழ் இணையதளத்தை அணுகுங்கள்.