BIGG BOSS 6: விஜய் டிவியில் ஓளிப்பரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதும் உள்ள தமிழ் ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பு இருந்து வந்த நிலையில் இந்த 6வது சீசனின் வெற்றியாளராக தொலைக்காட்சி நாடக நடிகர் அசீம் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு 50 லட்சம் ரூபாய் பரிசும் அழகான காரும் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதுவரை இல்லாத அளவில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏகப்பட்ட புதிய புதிய டாஸ்குகள் புதிய புதிய மாற்றங்கள் என பிக்பாஸ் நிகழ்ச்சி களைக்கட்டியது. ஆரம்பத்திலேயே இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் 21 அனுமதிக்கப்பட்டனர். எளிய மக்களையும் இந்த போட்டியில் சேர்க்க வேண்டியே விக்ரமன், தனலட்சுமி, திருநங்கை ஷிவின் அனுமதிக்கப்பட்டார்கள்.
அதைபோல, இறுதி நாட்கள் வரை விக்ரமனும் ஷிவினும் இறுதி போட்டியாளர்கள் பட்டியலில் இருந்து அசீமுக்கு தகுந்த நெருக்கடியை கொடுத்தார்கள். தன்னை போல திருநங்கை உலகில் பாதிக்கக்கூடாது என்ற எண்ணத்தை இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தவே இதில் கலந்து கொண்டதாகவும் கூறினார் ஷிவின்.

இறுதி வரை அறம் வெல்லும் என்ற கோஷத்துடன் காணப்பட்ட அரசியல் பின்புல நாயகன் விக்ரமன் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை இருந்து வந்த நிலையில் மக்களின் பேராதரவினால் அசீம் வென்று அசத்தினார். அசீமீன் கோபத்தை தான் மக்கள் குறை சொல்கின்றனரே தவிர அசீம் தவறானவர் என்று யாரும் குறை சொன்னது இல்லை. தான் எடுத்த முடிவினில் கொஞ்சமும் பின்வாங்காவராக பார்க்கப்பட்டார் அசீம். அதனாலேயே ரசிகர்கள் அவர் மீது அதிக வாக்குகளை போட்டு அவரை வெற்றி பெற செய்துள்ளனர்.
பிக் பாஸ் வீட்டில் திருநங்கை போட்டியாளராக கலந்து கொண்ட ஷிவின் 105 நாட்களும் வீட்டில் இருந்து டைட்டிலை வென்றே தீருவேன் என இறுதி வரை எந்தவொரு பெரிய சப்போர்ட்டும் இல்லாமல் போராடி வருகிறார். ஷிவினுக்கு ஒரு நாளைக்கு 18 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 105 நாட்களில் அவருடைய மொத்த சம்பளம் 21 லட்சம் என்கின்றனர்.
இதையும் படியுங்கள்: BIGG BOSS 6 : டைட்டில் வின்னராகியுள்ள அசீம் அடுத்தது செய்யப்போவது என்ன?
இது போன்ற தகவல்களுக்கு தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.