பிக்பாஸ் 6 தமிழ்: அசீம் ஏடிகே இடையே வாக்குவாதம் மோதல்

0
7

பிக்பாஸ் 6 தமிழ்: விஜய் தொலைக்காட்சியில் 5 சீசன்களை வெற்றிகரமாக முடித்து தற்போது 6வது சீசன் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை பலர் எலிமினேட் ஆகியுள்ளனர். இப்போது 11 பேர் மட்டுமே ஹவுஸ்மெட்டில் உள்ளனர். இதனால் கடும் போட்டி இவர்களுக்குள் நிலவி வருகிறது.

இதுவரை ஜி.பி.முத்து, அசல் கோலார், நிவாஷினி, சாந்தி, குயின்சி, ராபர்ட் மாஸ்டர், அயிஷா, ராம், மகேஸ்வரி என பலர் எலிமினேட் ஆகியுள்ள நிலையில் பிக்பாஸ் வீட்டில் நடக்கும் டாஸ்க்குகள் மூலம் வாரவாரம் களேபாரமாகி விடுகிறது.

இந்த நிகழ்ச்சி 67 நாட்களை கடந்துள்ள நிலையில் கடந்த வாரம் எலிமினேட் மூலம் ராம் மற்றும் ஆயிஷா வெளியேறி உள்ளனர். கமல் கடந்த வாரமே இந்த வார எலிமினேட்டில் இருவர் என்று முன்பே கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் 6 தமிழ்: அசீம் ஏடிகே இடையே வாக்குவாதம் மோதல்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரவாரம் டாஸ்க் கொடுக்கப்படும் இந்த வாரம் சொர்கவாசிகள் நரகவாசிகள் என பிரிந்து போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். இதில் இரு அணியினரும் ஒரு போட்டியாளரை மாற்றிக்கொள்வது பற்றி விவாதிக்கும் போது அசீம் – ஏடிகே இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

இதில் சொர்க்க வாசிகள் டீமில் உள்ள ஏடிகேவை நரகவாசிகள் அணிக்கு கொண்டுவர விரும்புவதாக அசீம் கூறுகிறார். அப்போது ஏடிகே உணர்ச்சிவசப்படுவதாக அசீம் சொன்னதைக் கேட்டு கடுப்பான ஏடிகே, அப்படி இங்க யாருக்குமே கிடையாது என சொன்னதைக் கேட்டு ஷிவின் சிரிக்கிறார். இதனால் கடுப்பான ஏடிகே, யாராச்சும் சிரிச்சா அசிங்கமா கேட்பேன் என சொன்னதும் டென்ஷன் ஆன அசீம் எதிர்த்து கேள்வி கேட்டதும், நீ சீன் போடாத அடங்கு என ஏடிகே சொல்கிறார்.

அதெல்லாம் நீ சொல்லாத என அசீமும் பதிலுக்கு பதில் வாக்குவாதம் செய்யத் தொடங்கியதால் இருவருக்கும் இடையே வார்த்தை மோதல்களும் ஏற்படுகின்றன. இதுகுறித்த புரோமோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

இதையும் படியுங்கள்: அவதார் 2 உலகம் முழுவதும் 52 ஆயிரம் ஸ்கிரீன்களில் வெளியாகிறது

இது போன்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை நாடுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here