BIGG BOSS 6 TAMIL: விஜய் டிவியில் பிரபலமான தொடர்களில் பிக்பாஸ் நிகழ்ச்சியும் ஓன்று இந்த தொடர் 5 சீசன்களை முடித்து தற்போது 6 வது சீசனை சிறப்பான முறையில் நடத்தி வருகிறது. இதில் அக்டோபர் 9ம் தேதி தொடங்கி இதுவரை 70 நாட்களை கடந்து வெற்றிகரமாக செல்கிறது. இந்த வார எலிமினேட்டில் ஜனனி வெளியேற்றப்பட்டார்.
இந்த நிகழ்ச்சியில் முதலாவதாக 21 பேர் விளையாட அனுமதிக்கப்பட்டனர். ஓவ்வொரு வாரமும் ரசிகர்கள் தரும் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் ஓருவர் அல்லது இருவர் எலிவினேஷனை பொறுத்து வெளியேற்றப்படுவார்.
முதலில் ஜி.பி.முத்து தானாகவே முன்வந்து வெளியேறினார். பின்னர், அசல் கோலார், சாந்தி, நிவாஷினி, ஷெரினா, மகேஸ்வரி, ராபர்ட் மாஸ்டர், குயின்சி, ஆயிஷா, ராம் தற்போது ஜனனி என வெளியேற்றப்பட்டனர்.
இந்த வார நாமினேட் லிஸ்டில் மணிகண்டன், அசீம், ஏடிகே, ஜனனி, கதிரவன், ரச்சிதா இருந்தனர். இந்த வார டிவிஸ்ட் ஓன்றில் மணிகண்டன் வெளியேற்றப்பட்டார் என்ற நிலையில் இருந்த பிக்பாஸ் வீட்டில் இறுதியாக ஜனனி என்று கார்டை காண்பித்து அதிர்ச்சி ஏற்படுத்தினார் ஜனனியின் ரசிகர்களுக்கு.

இலங்கையை சேர்ந்த பெண்ணான ஜனனி மீடியாவில் சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் துடிப்பாகவே இருந்தார். அதன் பின் இலங்கை சேனலில் செய்தி வாசிப்பாளராகவும், நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்துள்ளார். இதன் மூலம் கிடைத்த பிரபலத்தால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்த ஜனனிக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்து வந்தனர்.
இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஜனனிக்கு ஒரு நாளைக்கு 21 ஆயிரம் முதல் 26 ஆயிரம் வரை சம்பளம் என கொடுக்கப்பட்டு வந்த நிலையில் மொத்தமாக கிட்டத்தட்ட 18 லட்சம் வரை அவர் சம்பளமாக பெற்று வெளியேறியதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இதையும் படியுங்கள்: பிக்பாஸ் சீசன் 6ன் டைட்டில் வின்னர் இவர் தான் அடித்து சொல்லும் ஆயிஷா
இது போன்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.