பிக்பாஸ் 6 தமிழ்: விஜய் டிவியில் 5 சீசன்களை வெற்றிகரமாக முடித்து 6வது சீசன் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியை 1வது சீசன் முதல் தற்போது வரை உலக நாயகன் கமல் தொகுத்து வழங்கி வருகிறார். இதில் முதன் முறையாக 21 நபர்கள் களமிறக்கப்பட்டனர். ஓவ்வொரு வாரமும் ஓருவர் ரசிகர்கள் அளிக்கும் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் ஓருவர் வெளியேறுவார்.
இதுவரை ஜி.பி.முத்து, அசல் கோலார், நிவேதிதா, மகேஸ்வரி, மெட்டி ஓலி சாந்தி, ஷெரினா, ராபர்ட் மாஸ்டர், குயின்சி என எலிமினேட் ஆகியுள்ளனர். இப்போது இந்த பிக்பாஸ் வீட்டில் 13 பேர் மட்டுமே உள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சி 56 நாட்களை கடந்து சென்று இருக்கின்றது.
தினம் தினம் டாஸ்க் சண்டை என அதகலப்படுத்தும் ஹவுஸ்மெட்ஸ் வீடு. இந்நிலையில், இறுதியாக வெளியேறிய குயின்சிக்கு சம்பளத் தொகையாக 11 லட்சத்திற்குமேல் பெற்றிருப்பார் என தெரிகிறது.

இந்த நிலையில், முட்டையெல்லாம் காலி ஆயிடுது என்று விக்ரமனும் அமுதவாணனும் புகார் சொல்ல “நானும் பார்த்துக்கிட்டுதான் இருக்கேன். அவங்க கிட்ட சொல்லியும் பார்த்தாச்சு.. என்னதான் பண்றது?” என்று சலித்துக் கொண்டார் ரச்சிதா. அவர்களின் புகார் அசிமைப் பற்றியதாக இருந்தது. ஒருபக்கம் அசிம் மீது முட்டை புகார் வைக்கப்பட, அசிம் ஜனனி மீது சிக்கன் புகார் வைப்பதில் குறியாக இருந்தார்.
இதையும் படியுங்கள்: Bigg Boss 6 Tamil: வெளியேற்றப்பட்ட குயின்சியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
இதற்கிடையில் வரும் வாரம் எலிவினேஷனில் இருவர் வெளியேற்றப்படுவர் என்று உலக நாயகன் தெரிவித்துள்ளார். இந்த வார தலைவர் பதவிக்கு போட்டி நடந்தது. அதில் ஷிவின், தனலஷ்மி, மணிகண்டன் போட்டியிட்டனர். அந்த டாஸ்கில் மணிகண்டன் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக தலைவர் பதவியை பிடித்தார்.
இது போன்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.