BIGG BOSS 6 : பிக்பாஸ் சீசன் 6 விஜய் டிவியில் மிக பிரபலமான நிகழ்ச்சியாக மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. இந்த சீசனில் யார் டைட்டில் வின்னராக இருப்பார் என்று மக்களுக்குள் பெரும் குழப்பம் நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் பிக்பாஸிலிருந்து வெளியேறிய ஆயிஷா ஷிவின் நன்றாக விளையாடி வருகிறார் அவரே டைட்டில் வின்னராக வெல்வார் என்று கூறியிருக்கிறார்.
கடந்த வார எலிமினேட்டில் ஏடிகே வெளியேறுவார் என்று பார்த்த அனைவருக்கும் அதர்ச்சியாக ஜனனி வெளியேற்றப்பட்டார். அதன் பிறகு இந்த வார நாமினேட் லிஸ்டில் விக்ரமன், அசீம், ஏடிகே, ரச்சிதா, மைனா நந்தினி, கதிரவன் உள்ளிட்டோர் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த வார டாஸ்க்குகள் வெகுவாக அனைவரையும் கவர்ந்து வருகிறது.
பிக்பாஸ் வீடு பள்ளிகளாகவும் உள் இருப்பவர்கள் மாணவர்களாகவும் ஆசிரியர்களாகவும் கனா காணும் காலங்களை திரும்ப கொண்டு வரும் வகையில் ஹவுஸ்மெட்ஸ் குழந்தைகளாக மாறி குறும்பு தனத்தை அப்படியே வெளிப்படுத்தி அனைவரையும் கவர்ந்தனர்.

குழந்தைகளாகவே மாறிய பிக்பாஸ் போட்டியாளர்கள் கலக்கி வந்தனர். இதற்காக அவர்களது மெனக்கெடல்களுக்கு பாராட்டியே ஆக வேண்டும் என்று கூறும் அளவிற்கு இருந்தது. இதற்காக ஏடிகே, கதிரவன், மணிகண்டன் உள்ளிட்டவர்கள் மீசை மற்றும் தாடியை இழந்து குழந்தை தனத்தில் எப்படி இருக்க வேண்டுமோ அப்படியே இருந்து விளையாடி வருகின்றனர்.
பிக்பாஸ் போட்டியாளர்கள் சிலர் மாணவர்களாகவும் மாறி ஆசிரியர்களிடம் மழலை மொழி பேசி அவர்களுக்கு தேவையான உதவிகளை பெற்றுக்கொள்ளலாம். அதில் ஆசிரியர்களாக மாறும் சிலர், மாணவர்களுக்கு பாடங்களை கற்றுக்கொடுத்து தேவையான அனைத்தையும் செய்து கொடுக்க வேண்டும்.
மேலும், ஆசிரியராக மாறிய விக்ரமன், மியா மியா பூனைக்குட்டி என்று பாடும்போது, மழலை மாணவர்களாக மாறிய மற்ற போட்டியாளர்கள், “ஹே மியாவ் மியாவ்பூன அட மீசை இல்லா பூன” என்று விக்ரம் நடித்த கந்தசாமி படத்தில் வரும் பாடலை பாடி அனைவரையும் சிரிக்க வைத்தனர்.
இதையும் படியுங்கள்: bigg boss tamil 6: இந்த வார நாமினேட் மற்றும் வெளியேற போகும் நபர்
இந்த டாஸ்கில் கதிரவனுடைய கெட்டப் மற்றும் ஏடிகேவின் கெட்டப் அவரின் குறும்பு சிறப்பாக இருந்தது. இந்த டாஸ்க் ரசிகர்களுக்கு நகைச்சுவையாக அமைந்து அனைவரையும் கவர்ந்து வருகிறது.
இது போன்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.