BIGG BOSS 6 : பிக்பாஸ் சீசன் 6ல் டைட்டில் வின்னராகியுள்ள தொலைக்காட்சி நடிகர் அசீம் அடுத்தது செய்யப்போவது என்ன என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது. ஆறாவது சீசனின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ள அசீமீற்கு 50 லட்சம் தொகையும் காரும் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
விஜய் டிவியில் மிக பிரபலமான நிகழ்ச்சியாக ரசிகர்கள் மத்தியில் இடம் பெற்று வரும் நிலையில் இந்த சீசனில் 21 பேர் ஹவுஸ்மெட்டுகளாக அனுப்பப்பட்டனர். இந்த முறை மக்களில் ஓருவராக அரசியலில் இருந்து வரும் விக்ரமன் மற்றும் திருநங்கை ஷிவின் பொதுமக்களில் ஓருவராக தனலட்சுமி களமிறக்கப்பட்டனர்.
இதில் இறுதி வரை ஷிவின் மற்றும் விக்ரமன் பிக்பாஸ் ப்னாலே வரை வந்து முதல் முறையாக முதல் ரன்னராக விக்ரமன் அறிவிக்கப்பட்டார். அதுபோல ஷிவின் இரண்டாவது ரன்னராக வென்றார். 106 நாட்களை கடந்து வந்த இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த சீசனின் வெற்றியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

அசீம் இதுவரை 11 முறை நாமினேட் செய்துள்ளனர் அனைத்தையும் தாண்டி மக்களின் பேராதரவால் அதிக ஓட்டுகள் பெற்ற நிலையில் அசீம் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார். இறுதி வரை தன்னம்பிக்கையுடன் செயல்பட்ட அசீமிற்கு வெற்றி கிடைத்தது.
இந்த பிக்பாஸ் சீசன் 6ல் அனைத்து நிகழ்வுகளுமே மிகவும் வித்தியாசமாக நடைபெற்றதுடன், வெற்றி மேடையில் மூன்று போட்டியாளர்களையும் பிக்பாஸ் கொண்டு வந்து நிறுத்தினார். இந்த சீசனில் கமல்ஹாசன் உள்ளே இருந்த 3 போட்டியாளர்கள் தனது கைப்பட எழுதிய கடிதத்தினை பிரேம் போட்டு போட்டியாளர்களுக்கு தனது பரிசாக கொடுத்தார்.
கமெரா முன்பு நின்று பேசிய அசீம், “நான் செய்த சிறு தவறுகளை மன்னித்து கோபத்தில் பேசிய வார்த்தைகளையும் மன்னித்து, உரிமையாக கேட்கிறேன் என்னை பெற செய்யுங்கள்.
கொரோனாவில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவி செய்து வருகின்றேன். அவர்களின் கல்விச் செலவை ஏற்க வேண்டும் என்ற எனது கனவு நிறைவேற தற்போது பணம் தேவைப்படுகின்றது.
இந்த நிகழ்ச்சியில் நான் ஜெயித்தால் 25 லட்சம் அவர்களுக்கு சென்றடையுமாறு உதவி செய்வேன். என்னிடம் போதிய பணம் இல்லாததால் என்னை ஜெயிக்க வைத்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். நான் வீழமாட்டேன் விழுந்தாலும் திமிரி எழும் தமிழன்” என உருக்கமாக குறிப்பிட்டிருக்கிறார். அசீம் கூறியது போல் உதவி செய்வார் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.
இதையும் படியுங்கள்: Bigg boss 6: 103 நாட்கள் இருந்த மைனா நந்தினி பெற்ற சம்பள விவரம்
இது போன்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.