பிக்பாஸ் சீசன் 6: விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஓன்றான பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது ஆறாவது சீசன் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த அக்டோபர் 9 ம் தேதி தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி 50 வது நாளை கடந்துள்ளது. முதலில் 20 நபர்கள் வீட்டிற்குள் அனுப்பட்டனர். பின்னர் 21 வது நபராக ஓயில்டு கார்டு என்ட்ரியாக மைனா நந்தினி ஹவுஸ்மெட்டுகளுடன் இணைந்தார்.
இதுவரை நடந்த 5 சீசன்களை காட்டிலும் இந்த சீசனில் அதிக நபர்கள் அனுமதிக்கப்பட்டனர். மேலும், பொது மக்களில் இருவர் இந்த போட்டியில் கலந்து கொண்டுள்ளனர். எந்தவித பிரபலமும் இல்லாத நபர்கள் இருவர் ஓருவர் தனலஷ்மி, மற்றோருவர் ஷிவின். இம்முறை அரசியல்வாதியான விக்ரமனும் அனுமதிக்கப்பட்டார்.

இந்த சீசன் ஆரம்பம் முதலே சண்டை பிரச்சனைகள் டாஸ்க்குகள் என பலவித பிரச்சனைகளை கடந்து வந்து கொண்டுள்ளது. இதில் விளையாடும் நபர்கள் யார் நீடிக்க வேண்டும் என்று ஓட்டுகள் மூலமாக தீர்மானிக்கப்படுவார்கள் இதை தீர்மானிப்பவர்கள் ரசிகர்கள். இந்நிகழ்ச்சியை தொடர்ந்து உலக நாயகனே தொகுத்து வழங்கி வருகிறார். தொடர்ந்து ஓவ்வொரு வாரமும் ஓருவர் ரசிகர்களின் ஓட்டுகளில் குறைந்த வாக்குகளை பெற்றவர் இந்த பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார்.
அந்த வகையில் முதல் வாரம் யாருக்கும் எலிமினேஷன் இல்லை. தொடர்ந்து வரும் வாரங்களில் முதலாவதாக மெட்டி ஓலி நாடகத்தில் நடித்த சாந்தி வெளியேற்றப்பட்டார். இதற்கு முன்னர் தானே இந்த வீட்டை விட்டு வெளியேறுவதாக அறிவித்து ஜிபி முத்து வெளியேறினார்.
பின்னர், அசல் கோலார், ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி பலர் வெளியேற்றபட்டுள்ளனர். நேற்று நடந்த எலிவினேஷனில் ராபர்ட் மாஸ்டர் வெளியேற்றப்பட்டார். குறைந்த வாக்குகள் அடிப்படையில் ராபர்ட் மற்றும் மணிகண்டன் இருவரும் இருந்த நிலையில் ராபர்ட் மாஸ்டரை வெளியேற்றினார் பிக்பாஸ்.
தற்போது, ராபர்ட் மாஸ்டருக்கு வழங்கப்பட்ட சம்பளம் குறித்த தகவலும் வெளியாகி உள்ளது. ராபர்டையும் ரச்சிதாவையும் கலாய்த்து வந்த ரசிகர்கள் ரச்சிதா இனி ஹஸ்மெட்டுடன் ராபர்ட் இல்லாமல் எப்படி இருப்பாரோ என்று சமூக வலைதளங்கள் வாயிலாக கலாய்த்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்: பிக்பாஸ் சீசன் 6: போட்டியாளர்களின் ஓருநாள் சம்பளம் பற்றிய தகவல்
இந்நிலையில், ராபர்ட் மாஸ்டருக்கு 12 லட்சம் முதல் 14 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. கமல் ராபர்ட் மாஸ்டரிடம் இறுதி வரை இருப்பீர்கள் என்று எதிர்பார்த்தேன் என்றார். அதற்கு சரித்து கொண்டே என் தந்தையை காண வேண்டும் இனி இந்த போட்டியில் என்னால் தொடர முடியாது என்று கூறி வெளியேறினார் மாஸ்டர்.
இது போன்ற பல தகவல்களை பெற தலதமிழை இணையதளத்தை பின்பற்றுங்கள்.