பிக் பாஸ் சீசன் 6: இம்முறை 20 பேர் களமிறங்கி உள்ளனர் என் முழு விபரம் இப்பதிவில் அறியலாம்.
விஜய் டிவி தொலைகாட்சியில் மிக பிரபலாமான நிகழ்ச்சி BIGG BOSS இந்த நிகழ்ச்சி கடந்த போட்டிகள் வரை 5 சீசன்கள் சிறப்பாக முடிந்து உள்ளது. இந்த 5 வது சீசனில் டைட்டில் வின்னராக ராஜூவும் இரண்டாவதாக ப்ரியங்காவும் வென்றனர். இதனை அடுத்து 6 வது சீசன் எப்போது தொடங்கும் என பிக் பாஸ் ஆர்வலர்கள் எதிர்பார்த்து காத்திருந்னர். இந்நிலையில், நேற்று 9 ம் தேதியான ஞாயிற்று கிழமை அன்று ஓளிபரப்பாவதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த சீசனை தொடர்ந்து உலக நாயகனே நடத்துவார் என்றும் உறுதி செய்யப்பட்டது. நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கிய BIG BOSS-6 ல் முதலாவதாக ஜி.பி.முத்து களம் இறங்கினார். இவர் டிக்டாக் பிரபலமான நகைச்சுவை வீடியோக்களால் மக்கள் மனதை கவர்ந்தவர். இவரின் யூடிப்சேனலில் 9 லட்சம் சப்ஸ்கிரைபரை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

1. G.P. முத்து யூடியுபர் நகைச்சுவை கலைஞர்.
2.அசல் கோலாறு (வசந்த்) இசைக்கலைஞர் பாடகர்.
3.ஷிவின் கணேசன் (திருநங்கை) – IT பணியாளர்.
4.ராபர்ட் மாஸ்டர் நடன இயக்குனர்.
5.ஷெரினா மாடல் அழகி.
6.ராம் ராமசாமி மாடல் நடிகர்.
7.ஜனனி (இலங்கை) செய்தி வாசிப்பாளர்.
8.ஆசிப் அலி சீரியல் நடிகர்.
9.ADK ஆர்யன் தினேஷ் கனகரத்னா (இலங்கை) – இசைக்கலைஞர் / RAP பாடகர்
10.அமுதவாணன் STANDUP COMDYAN மற்றும் நடிகர்.
11.VJ.மகேஸ்வரி தொகுப்பாளர் மற்றும் நடிகர்.
12.VJ கதிரவன் தொகுப்பாளர்
13.ஆயிஷா சீரியல் நடிகை
14.தனலக்ஷமி டிக்டாக்கர்
15.ரச்சிதா மகாலக்ஷ்மி – சீரியல் நடிகை
16.மணிகண்டா ராஜேஷ் நடிகர்
17.சாந்தி அரவிந்த் – நடன இயக்குனர் / நடிகை (மெட்டி ஒலி)
18.விக்ரமன் – அரசியல்வாதி ( விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய பேச்சாளர்) / முன்னாள் அரசியல் தொகுபாளர் (கலாட்டா)
19.க்ரூப்ஸ் ஸ்டான்லி – வளரும் நடிகை
20.நிவிஷினி (சிங்கப்பூர்) – மாடல்
இந்த பிக்பாஸ் சீசன் நிகழச்சியில் முதன் முறையாக 20 போட்டியாளர்கள் களமிறக்கி உள்ளனர். பொதுவாக 13-14 வரை களம் இறங்கி விடப்பட்ட போட்டியாளர்கள் ஓவ்வொரு போட்டியிலும் அதிகரித்து இறக்கி விடப்பட்டுள்ளனர். கடந்த 5 வது சீசனில் 18 பேர் வரை கலந்து கொண்டனர். இந்த சீசன் 6ல் 20 பேர் கலந்து கொண்டு உள்ளனர். இதில் திருநங்கையும் ஓருவர். பலர் நடன கலைஞர் இசை கலைஞர் பாடகர் என கலந்து கொண்டு உள்ளனர். இப்போட்டியில் மூன்று பொது மக்கள் அதாவது வேறு துறையை சார்ந்தவர்களும் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.