பிக்பாஸ் சீசன் 6: இந்த வாரம் எலிமினேஷன் லிஸ்ட்

0
12

பிக்பாஸ் சீசன் 6: விஜய் டிவியில் மிகவும் ரசிகர்களால் விரும்பப்படும் நிகழ்ச்சி பிக்பாஸ் இதுவரை 5 சீசன்களை வெற்றிகரமாக முடித்துள்ள நிலையில் தற்போது 6 வது சீசன் நடந்து வருகிறது. எப்பொழுதும் போல சண்டை, காதல், அன்பு, அரவணைப்பு, விரோதம் என அதகலப்படுத்தும் வண்ணம் இருக்கிறது ஹவுஸ்மெட் விசுவாசிகள்.

ஓவ்வொரு சீசனிலும் ஓவ்வொரு பிரச்சனைகள் இருப்பது இயல்பே இந்த சீசனில் மொத்தம் 20 நபர்கள் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டனர். ஓரு வாரம் முடிந்த நிலையில் ஓயில்டு கார்டு என்டிரியாக மைனா நந்தினி சென்றார். தினமும் ஆட்டம் பாட்டம் கலை நிகழ்ச்சி நாடகம் மன்னர் வேடங்கள் அதை சார்ந்த வேடதாரிகள் என இந்த பிக்பாஸ் வீடே பரப்பரப்பாக காணப்படுகிறது.

பிக்பாஸ் சீசன் 6: இந்த வாரம் எலிமினேஷன் லிஸ்ட்

நாமினேஷன் பட்டியலில் இருப்பவர்களில் ஒருவர் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் வெளியேற்றப்படுவார் என்பது தெரிந்ததே. அந்த வகையில் இந்த வாரம் அசீம், தனலட்சுமி, கதிரவன், ராம், அமுதவாணன், மணிகண்டன் மற்றும் ராபர்ட் ஆகிய 7 பேர் நாமினேஷனில் இருந்தாலும் டேஞ்சர் ஜோனில் அமுதவாணன், ராம், ராபர்ட் மற்றும் மணிகண்டன் ஆகிய நால்வர் இருப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் ராபர்ட் மாஸ்டர் இந்த வாரம் வெளியேற்றப்படலாம் என்ற தகவல் வந்துள்ளது. ஏனெனில் ஓவ்வொரு வாரமும் தப்பித்துக் கொண்டு இருக்கின்றார் மாஸ்டர் அதுமட்டுமில்லாமல் ரச்சிதாவிடம் ஓருதலையாக காதல் செய்வதையே தன் வேலையாக வைத்துள்ளார்.

இதையும் படியுங்கள்: பிக்பாஸ் சீசன் 6: போட்டியாளர்களின் ஓருநாள் சம்பளம் பற்றிய தகவல்

இந்த வார எலிமினேஷனில் ராபர்ட் மாஸ்டர் மற்றும் மணிகண்டன் இருவரும் ஓரே அளவில் ஓட்டுகளை பெற்றுள்ளதாகவும் தகவல் இருப்பினும் மணிகண்டனை விட ராபர்ட் மாஸ்டரே வெளியேற்றப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது போன்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here