பிக்பாஸ் சீசன் 6: இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி முதன் முதலில் வெளிநாடுகளில் துவங்கப்பட்டது. பின்னர், இந்தியில் தொடங்கி இப்போது 16 வது சீசன் நடைபெற்று வருகிறது. தற்போது, இந்த நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஆந்திரா என அனைத்து மொழிகளிலும் இந்த நிகழ்ச்சி பிரபலமாகி வந்துள்ளது. தமிழில் விஜய் டிவி இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தி வருகிறது.
இந்த நிகழ்ச்சிக்கு மக்களிடையே பெரும் வரவேற்பை பெறும் நோக்கில் இதற்கு தொகுப்பாளராக உலக நாயகனை நியமித்தது விஜய் தொலைக்காட்சி முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி முதல் தற்போது வரை கமலஹாசனே தொகுத்து வருகிறார். அரசியல் பணி, சினிமா பணி என பிஸியாக இருந்தாலும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதை தவறுவதில்லை.

இந்த ஆறாவது சீசனில் இதுவரை 8 பேர் வெளியேறி உள்ளனர். ரசிகர்கள் தரும் வாக்குகள் அடிப்படையில் வெளியேறியுள்ளனர். இந்த நிகழ்ச்சிக்கு 21 பேர் நியமிக்கப்பட்டு ஹவுஸ்மேட்டுகளாக அனுப்பட்டனர். முதலாவதாக ஜி.பி.முத்து குடும்பத்தை பிரிந்து இருக்க முடியவில்லை எனக் கூறி வெளியேறினார். பின்னர், தொடர்ந்து ரசிகர்கள் அளிக்கும் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் வெளியேற்றப்பட்டனர்.
அசல் கோலார், ஷெரினா, மகேஸ்வரி, சாந்தி, மகேஸ்வரி, ராபர்ட் மாஸ்டர், குயின்சி உள்ளிட்டவர்கள் ஓவ்வொரு வாரமும் வெளியேற்றப்பட்டனர். இறுதியாக குயின்சி வெளியேறினார்.
இந்த நிலையில் பிக்பாஸ் 56 நாட்களை கடந்து வெற்றிகரமாக சென்று கொண்டுள்ளது. வரும் வாரம் இருவர் எலிமினேட் ஆவார்கள் என்று கூறி ஹவுஸ்மெட்ஸ்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார் உலக நாயகன்.
இதற்கிடையில் இந்த வார நாமினேட் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் ஆஷா, ஜனனி, ராம், அசிம், கதிரவன், ஏடிகே என ப்ரோமோவில் வெளியானது. விக்ரமன், ரச்சிதா, தனலட்சுமி, அமுதவாணன், மணிகண்டன் போன்றோர் சேவ் சோனில் இருக்கின்றனர். இதனால் ஹவுஸ்மெட் வீடு ரத்தக்களரியாகி உள்ளது. இனி வரும் நாட்களில் சூதனமாக ஆட வேண்டும் என்று பட்டியலில் வந்தவர்களுக்கு தெரிந்திருக்கும்.
இதையும் படியுங்கள்: பிக்பாஸ் 6 தமிழ்: அசிம் மீது முட்டை புகார்- ஜனனி மீது சிக்கன் புகார்
இது போன்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.