பிக்பாஸ் சீசன் 6: விஜய் டிவில் மிகப் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சி இதற்கு மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ள நிலையில் 5 சீசன்களை வெற்றிகரமாக முடித்துள்ளது. தற்போது 6 வது சீசன் 50 நாட்களை கடந்து சென்றுக் கொண்டுள்ளது.
இந்த சீசனில் முதன் முதலாக ஹவுஸ்மெட்டுகள் 20 நபர்களை களமிறக்கப்பட்டனர். அதுபோல பொது மக்களில் இர் இருவர் களமிறக்கப்பட்டனர். அந்த வகையில் தனலட்சுமி, ஷிவின், அரசியலவாதியான விக்ரமன் உள்ளிட்டோர் புதியதாக களமிறக்கப்பட்டனர். மீதமுள்ளவர்கள் அனைவரும் யூடியுப் பிரபலங்கள், சீரியல் பிரபலம், டான்ஸ் மாஸ்டர் என அனைத்திலும் கலந்து இருந்தனர்.
இந்த சீசன் ஆரம்பம் முதலே பிரச்சனைகளுக்கும் சண்டைகளுக்கும் இடைவெளி இல்லாமல் சென்று கொண்டுள்ளது. எந்த டாசைக்கை எடுத்தாலும் அதில் எதாவது பிரச்சனை ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்த வார டாஸ்க்கில் பழங்குடியினருக்கும் ஏலியன்ஸ்களுக்கும் இடையே டாஸ்க்குகள் செய்ய அறிவுறுத்தி இருந்தார் பிக்பாஸ். அதன்படி பழங்குடியினர் ஓரு அணியாகவும் ஏலியன்ஸ்களாக ஓரு அணியாகவும் இருந்து டாஸ்க்குகளை விளையாடி வந்தனர்.
இந்நிலையில், இதில் ஏலியனாக உள்ள அமுதவாணன், பழங்குடி இன மக்களில் ஒருவரான கதிரை பிடிக்கிறார். அப்போது உள்ளே வந்த அசீம் அமுதவாணனை ஆக்ரோஷமாக அடித்து தள்ளி விடுகிறார். அமுதவாணன் என்னை அடித்தாய் என அசீம்மிடம் கூற, நெஞ்சில் உரம் இருந்தால் என்னை அடிடா, தைரியம் இருந்தால் என்னை அடிடா என ஆவேசமாக கத்துகிறார்.
இதையும் படியுங்கள்: பிக்பாஸில் இந்த வாரம் நாமினேட் ஆனவர்கள் முழு விபரம்
இந்த நிகழ்ச்சி ஆரம்பம் முதலே அனைவரிடமும் எதாவது சண்டை இடுவதையே வழக்கமாக கொண்டுள்ளார். அது போல தான் இப்போது அமுதவாணன் அசீமுடன் சண்டையிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் அசீமிற்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என கூறி வருகின்றனர்.
இது போன்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை நாடுங்கள்.