பிக்பாஸ் சீசன் 6: விஜய் டிவியில் மக்களின் மிகப் பெரும் ஆதரவுடன் சிறப்பான நிகழ்ச்சியாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கு பெறும் நபர்கள் இந்த பிக்பாஸ் வீட்டில் தனிமையில் இருப்பர் இவர்களுடன் எவ்வித தொடர்பும் இருக்காது. அவர்களுக்கு மொபைல்கள் கூட அனுமதி கிடையாது. இதுவரை இந்த நிகழ்ச்சி 5 சீசன்களை வெற்றிகரமாக முடித்துள்ளது.
இந்த சீசன் 6 வது சீசனாகும். இந்த நிகழ்ச்சி அக்டோபர் 9ம் தேதி 20 நபர்களை கொண்டு தொடங்கியது. இதில் கலந்து கொண்டவர்கள் அவரவர் துறைகளில் சிறப்பானவர்களாக இருக்கின்றனர். ஓரு வாரம் கடந்து ஓயில்டு கார்டு முறையில் மைனா நந்தினி பிக்பாஸ் வீட்டிற்கு வந்தார்.
ஓவ்வொரு வார இறுதியிலும் பிக்பாஸ் வீட்டிலிருந்து குறைவான மக்கள் வாக்குகளை பெற்ற நபர்கள் வெளியேற்றப்படுவர். இந்த போட்டியில் காரசார விவாதங்கள் சண்டைகள் பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்களுக்கு டாஸ்குகள் வழங்கப்படும் அந்த டாஸ்குகளை சரியாக செய்யும் அணிக்கு மதிப்பெண் வழங்கப்படும்.

அதுமட்டும் இல்லாமல் பிபி வீட்டில் இருப்பவர்களுடன் ஓவ்வொருவரும் எப்படி நடந்து கொள்கின்றனர் எவ்வாறு டாஸ்குகளை கையாலுகின்றனர். யார் தில்லுமுல்லு செய்பவர் யார் விட்டுக் கொடுத்து செல்பவர் என பல விதங்களில் உற்று நோக்கப்படுவார் இவர்களுக்கு மக்கள் தான் வாக்குகளை கொடுத்து இந்த நிகழ்ச்சியில் தொடர விரும்புபவர்களுக்கு வாக்குகளை தருபரவர்களாக இருந்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்: பிக்பாஸ் சீசன் 6: போட்டியாளர்களின் ஓருநாள் சம்பளம் பற்றிய தகவல்
முதலாவதாக தானே வெளியேறுவதாக ஜி.பி.முத்து வெளியேறினார். பின்னர், மெட்டிஓலி சாந்தி வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து அசல் கோலார், ஷெரின், மகேஸ்வரி என வெளியேற்றப்பட்டனர். இந்த வாரம் வெளியேற்றப்படும் நபர்களில் முதலாவதாக இருப்பவர் நடன மாஸ்டர் ராபர்ட் இருந்து வருகிறார்.
இவர் ஹஸ்மெட்டுடன் அதிலும் ரச்சிதாவிடம் அடிக்கும் லூட்டியை ரசிகர்கள் வச்சி செய்து வருகின்றனர். இந்நிலையில், அவர் வெளியேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது போன்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.