BIGG BOSS TAMIL 6: விதிகளை மாற்றிய பிக்பாஸ் நாமினேஷ்னல் லிஸ்ட்

0
18

BIGG BOSS TAMIL 6: விஜய்டிவியில் ஓளிப்பரப்பாகி ரசிகர்களிடையே பெரும் ஆதரவை பெற்று வரும் நிகழ்ச்சிகளில் பிக்பாஸ் சீசனும் ஓன்று. இதுவரை 5 சீசன்கள் முடிந்துள்ள நிலையில் தற்போது 6 வது சீசன் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை ஆரம்பம் முதலே தொகுத்து வருபவர் உலக நாயகன் கமலஹாசன் இதனாலேயே பிரபலமானதாகவும் கருத்து உண்டு.

தற்போது, இதில் விதிகளை மாற்றியமைத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார் பிக்பாஸ். பொதுவாக வாரவாரம் நடக்கும் கேப்டன் பதவிகளுக்கு நடக்கும் டாஸ்கில் வென்று கேப்டன் பதவியை வகிக்கும் நபர்களை நாமினேட் செய்ய முடியாது. இந்த நடைமுறையை மாற்றி அமைத்து கேப்டனையும் நாமினேட் பண்ணலாம் என்ற புதிய விதியை ஏற்படுத்தி உள்ளார் பிக்பாஸ்.

இதனால் இந்த வாரம் நடந்த கேப்டன் பதவிக்கு அமுதவாணன் மற்றும் அசீம் உடனான டாஸ்கில் அமுதவாணன் வெற்றி பெற்ற நிலையில் கேப்டனாக இந்த வாரம் செயல்பட உள்ளார் அமுதவாணன் இந்நிலையில் நாமினேட் லிஸ்டிலில் இருந்து காப்பற்றப்படலாம் என்ற நினைப்பில் இருந்த அமுதுவிற்கு இந்த விதிமுறை அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

விதிகளை மாற்றிய பிக்பாஸ் நாமினேஷ்னல் லிஸ்ட்

இந்த நிலையில் அஸிம், ஷிவினை நாமினேட் செய்தார். பின் பலரும் அஸிமை நாமினேட் செய்தனர். விக்ரமன், மணிகண்டாவை நாமினேட் செய்த ப்ரோமோ வெளியாகியது.

பிக்பாஸ் நிகழ்ச்சி 12வது வாரத்தில் தடம் பதித்துள்ள நிலையில் ஹவுஸ்மெட்டாக 9 பேர் மட்டுமே இருந்து வருகின்றனர். இதுவரை ஜி.பி.முத்து, அசல்கோலார், சாந்தி, மகேஸ்வரி, நிவாஷினி, ஷெரினா, ராபர்ட் மாஸ்டர், குயின்சி, ஆயிஷா, ராம், ஜனனி, தனலட்சுமி உள்ளிட்டவர்கள் ஓவ்வொரு வாரமும் ரசிகர்கள் அளிக்கும் குறைந்த ஓட்டுகளின் அடிப்படையில் வெளியேறியுள்ளனர்.

இதையும் படியுங்கள்: BIGG BOSS TAMIL 6: நேற்று வெளியேறிய தனலட்சுமியின் சம்பளம் விபரம்

இந்த சீசனில் டைட்டில் வின்னராக யார் வெல்லுவார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே எழுந்துள்ள நிலையில் விதியை மாற்றி அமைத்துள்ளார் பிக்பாஸ்.

இது போன்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here