BIGG BOSS TAMIL 6: விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் பிக்பாஸ் மக்களை கவர்ந்துள்ளது. இதுவரை 5 சீசன்களை முடித்து 6வது சீசன் நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் 21 பேர் அனுமதிக்கப்பட்டனர். கிட்டத்தட்ட 90 நாட்களை கடந்துள்ள இந்நிகழ்ச்சி ஏறக்குறைய முடியும் தருவாயில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது பிக்பாஸ் வீட்டில் அசீம், விக்ரமன், ஏடிகே, கதிரவன், அமுதவாணன், ரச்சிதா, நந்தினி, ஷிவின் 8 பேர் மட்டுமே உள்ளனர். கடந்த வாரங்களில் ஃப்ரிஸ் டாஸ்க் நடத்தப்பட்டது. அவரரவர் குடும்பத்தினர் வந்து சந்தித்து சென்றனர். பின்னர், அடுத்த வாரமே மணிகண்டா வெளியேற்றப்பட்டார். இதுவரை அதிகமுறை கேப்டனாக இருந்து வந்தவர் மணிகண்டா.
விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் இந்நிகழ்ச்சியில் இந்த சீசனில் டைட்டில் வின்னராக யார் வெல்லுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த வார டாஸ்க்கில் பல சுவாரசியங்கள் நிகழ்ந்தது. ஓவ்வொரு வாரமும் குறைந்த வாக்குகளை பெறும் போட்டியாளர்களை பிக்பாஸ் வெளியேற்றப்படுவார் அந்த நிலையில் இந்த வாரம் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் இருப்பவர் விஜே கதிரவன்.

இது அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை. வரும் ஞாயிறு அன்று கமலஹாசன் யார் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார் என்பதை அறிவிப்பார். வாக்குபதிவுகளின் படி, இந்த வாரம் ஏடிகே, ஷிவின், விக்ரமன், ரச்சிதா ஆகியோர் பாதுகாப்பாக உள்ளனர். ஆபத்தான நிலையில் அமுதவாணன், கதிரவன், மைனா நந்தினி ஆகியோர் இருக்கின்றனர். இந்நிலையில், கதிரவன் வெளியேற்றப்படலாம் என்று கருதப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியின் இறுதி டாஸ்கான டிக்கெட் டூ ஃபினாலே போட்டியில் கதிரவனை வீழ்த்தி கதிரவன் தோல்வியடைந்தார். டிக்கெட் டூ ஃபினாலேவில் வெற்றி பெற்று முதல் ஆளாக இறுதிக்கு தகுதி பெற்றுள்ளார் அமுதவாணன்.
பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களுக்கு பிபி க்ரிடிக்ஸ் விருதுகள் வழங்கும் விழா நடந்து கொண்டிருக்கிறது. போட்டியாளர்கள் அழகாக உடையணிந்து ஒரு இடத்தில் கூடியிருக்கிறார்கள்.
கதிருக்கு மிக்சர் விருது வழங்கப்பட்டது. அசீமுக்கு கொடுத்த விருதை பார்த்து அவர் கடுப்பாாகி அதை தூக்கி வீசினார். இந்நிலையில் வெளியாகியிருக்கும் இரண்டாவது ப்ரொமோ வீடியோவில் விக்ரமனுக்கு விருது வழங்கியதை காட்டியிருக்கிறார்கள்.
இதையும் படியுங்கள்: BIGG BOSS 6: ஏடிகேவை வெளியேற்றி விடுவேன் என எச்சரித்த பிக்பாஸ்
இது போன்ற தகவல்களுக்கு தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.