bigg boss tamil 6: இந்த வார நாமினேட் மற்றும் வெளியேற போகும் நபர்

0
14

bigg boss tamil 6: விஜய் டிவியில் மிக பிரபலமான நிகழ்ச்சிகளில் பிக்பாசும் ஓன்று இதுவரை 5 சீன்களை முடித்து 6 வது சீசன் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருபவர் உலக நாயகன் ஆரம்பம் முதலே இவரை இந்த நிகழ்ச்சியை தொகுத்து வருகிறார்.

இந்த சீசனில் 21 நபர் அனுமதிக்கப்பட்டனர் அதில் தற்போது, விக்ரமன், ஆசிம், ஏடிகே, மணிகண்டன், கதிரவன், அமுதவாணன், ஷிவின், தனலட்சுமி, ரச்சிதா, மைனா நந்தினி உள்ளிட்ட 10 பேரும் 71 நாட்களை கடந்து சென்றுள்ளனர். இந்த நிலையில் இந்த வார நாமினேட் ஆனவர்கள் பட்டியல் வெளியானது.

அதில், ரச்சிதா, மைனா நந்தினி, விக்ரமன், தனலட்சுமி, அசீம், கதிரவன், ஏடிகே நாமினேடிற்கு தேர்வு செய்யப்பட்டு உளளனர். இதில் சுமாராக விளையாடி வரும் நந்தினி மற்றும் ரச்சிதா இந்த வாரம் வெளியேறலாம் என மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

bigg boss tamil 6: இந்த வார நாமினேட் மற்றும் வெளியேற போகும் நபர்

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவ்வொரு வாரமும் மக்கள் அளிக்கும் குறைந்த ஓட்டுகளை பெற்ற நபர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவர். இந்த வாரம் நாமினேட் செய்துள்ள நபர்கள் அவர்களின் திறமையை இந்த வார டாஸ்க்குகள் மூலம் நிரூபித்து மக்களிடம் அதிகப்படியான ஓட்டுகளை பெற வேண்டும். அதில் குறைந்த ஓட்டுகளை பெறும் நபர் வெளியேற்றப்படுவர்.

இந்த வார டாஸ்க்குகளை அறிவித்த பிக்பாஸ், பிக்பாஸ் வீடு பள்ளிக்கூடமாகவும் பிபி வீட்டில் இருப்பவர்கள் பலர் மாணவர்களாகவும் சிலர் ஆசிரியராகவும் செயல்பட அறிவுறுத்தி இருந்தார் பிக்பாஸ். பள்ளிக்கூட மாணவர்களாக நடிக்கப் போகும் போட்டியாளர்கள் குழந்தை போலவே மாறி மக்களை சிறிக்க வைக்க வேண்டும். இதன் மூலம் மக்கள் ஓட்டு வழங்க போகின்றனர் என்பதை மனதில் வைத்து கொண்டு நடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படட்து.

இதையும் படியுங்கள்: BIGG BOSS 6 TAMIL: ஜனனி பெற்ற சம்பளத் தொகை தெரியுமா?

இது போன்ற தகவல்களுக்கு தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here