BIGG BOSS SEC 6: பிக்பாஸ் வீட்டில் பிபி க்ரிடிக்ஸ் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பங்கு பெற்ற விக்ரமனுக்கு பூமர் என்ற விருது அளிக்கப்பட்டது. இந்த விருதை ஏற்க மறுத்த விக்ரமன் நான் பூமர் இல்லை மார்டன் என கூறினார். மரியாதை கருதி நீங்கள் கொடுத்த கீரிடத்தை ஏற்கிறேன் ஆனால், நான் பூமர் இல்லை எனக் கூறி இருந்தார்.
பிபி கிரிடிக்ஸ் விருது வழங்கும் விழா பிக்பாஸ் வீட்டில் நடைபெற்று வந்தது. இதில் போட்டியாளர்கள் அனைவரும் அழகாக உடை அணிந்து ஓரு இடத்தில் கூடியிருந்தார்கள்.
இந்நிலையில், கதிருக்கு மிக்சர் விருது வழங்கப்பட்டது. அசீமுக்கு கொடுத்த விருதை பார்த்து அவர் கடுப்பாாகி அதை தூக்கி வீசினார். இரண்டாவது ப்ரொமோ வீடியோவில் விக்ரமனுக்கு விருது வழங்கியதை காட்டியிருக்கிறார்கள்.

பூமர், பூமர் அங்கிள் விருது என்று மைனா நந்தினி கூறுவதுடன் ப்ரொமோ வீடியோ துவங்கியிருக்கிறது. பூமர் என்றால் என்னவென்று அமுதவாணன் கேட்க, ஓல்டு மேன், ஓல்டு தாட் என அசீம் விளக்கம் கொடுத்தவுடன் விக்ரமன் பெயரை தெரிவித்தார் அமுதவாணன். இதை அன்பாக ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கூறி பூமர் கிரீடத்தை விக்ரமனுக்கு அணிவித்தார் அமுதவாணன்.
கிரீடத்தை வாங்கிக் கொண்ட விக்ரமனோ, நீங்கள் கொடுப்பது தவறு என்பதால் நான் ஏற்கவில்லை ஆனால் தலையில் மாட்டிக் கொள்கிறேன். பெண் என்றால் இந்த வேலை தான் பார்க்க வேண்டும் என்று சொல்வது. பையன் என்றால் அழக் கூடாது என்று சொல்வது. இது எல்லாமே பூமர் கணக்கில் வரும். இதுக்கு எல்லாத்துக்குமே ஆப்போசிட் நான். நீங்கள் கொடுத்த மாரியாதைக்காக இதை மாட்டிக் கொள்கிறேன். ஆனால் நான் பூமர் இல்லை. ஐ ஆம் மாடர்ன் என்றார் விக்ரமன்.
இதற்கடுத்து அமுதவாணன் என் புரிதல் தவறா அல்லது நான் சொன்னது தவறா என கேட்டார். அதற்கு பதிலளித்த விக்ரமன் புரிதலே தவறுதான் என்று கூறினார். இதனால் காரசாரமாக முடிந்துள்ளது பிபி க்ரிடிட் விருது வழங்கும் விழா.
இதையும் படியுங்கள்: BIGG BOSS TAMIL 6: இந்த வாரம் பிக்பாஸிலிருந்து வெளியேறுபவர் இவரா?
இந்த பிக்பாஸ் 90 நாட்களை கடந்து சென்று கொண்டுள்ளது. முடியும் தருவாயை நெருங்கும் நிலையில் யார் இந்த சீசன் வெற்றியாளர் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்து வருகிறது.
இது போன்ற தகவல்களுக்கு தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.