BIGG BOSS TAMIL 6: பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் ஓளிப்பரப்பாகி வருகிறது. 5 சீசன்களை முடித்து தற்போது 6வது சீசனை வெற்றிகரமாக நடத்தி வருகிறது. இதற்கு மக்கள் மத்தியிலும் ஆதரவு உள்ள நிலையில் இந்த சீசன் 85 நாட்களை கடந்து சென்று கொண்டு இருக்கின்றது. இந்த முறை டைட்டில் வின்னராக யார் வருவார் என்ற எதிர்பார்ப்பும் அனைவர் மத்தியிலும் அதிகரித்துள்ளது.
இந்த சீசனில் முன்னரே ஜி.பி.முத்து, அசல் கோலார், சாந்தி, மகேஸ்வரி, நிவாஷினி, ஷெரினா, ராபர்ட் மாஸ்டர், குயின்சி, ஜனனி, ராம், ஆயிஷா, தனலட்சுமி உள்ளிட்ட அனைவரும் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து அசீம், விக்ரமன், ஷிவின், அமுதவாணன், கதிரவன், மைனா நந்தினி, ரச்சிதா, மணிகண்டன், ஏடிகே போன்றோர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் விளையாடி வருகின்றனர்.
இந்த வாரம் பிக்பாஸ் ஃப்ரிஸ் டாஸ்க் அறிவித்தார் இந்த டாஸ்கின் போது உறவினர்கள் வருவது பிக்பாஸ் நிகழ்ச்சியின் வழக்கம் இதற்கு முன்னர் நடந்த சீசன்களிலும் இதே நிகழ்வு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த வாரம் நாமினேட் லிஸ்டில் ரச்சிதாவை தவிர மீதமுள்ள அனைவரின் பெயர்களும் இருந்தன. ரச்சிதா மட்டும் சேவாகி தப்பித்துள்ளார். அடுத்த வாரம் விக்ரமன், ஷிவின், கதிரவன் சேவாக உள்ளதாக தகவல் வந்துள்ளது. அதேபோல இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் நபராக மைனா நந்தினி அல்லது மணிகண்டன் இருக்கலாம் என கருதப்படுகிறது.
ஓவ்வொரு வாரமும் மக்கள் அளிக்கும் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் பிக்பாஸ் வீட்டை விட்டு ஓருவர் வெளியேற்றப்படுவார். அதில் இந்த வாரம் மணிகண்டனாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. ஏனெனில் இவர் தனக்கான விளையாட்டை விளையாடாமல் அசீமுக்கு பக்கபலமாக இருந்து விளையாடி வருவதாக ரசிகர்கள் கருதுகின்றனர். இதனால் இவர் வெளியேற்றப்படலாம் என கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்: BB வீட்டில் சர்ப்ரைஸ் கொடுத்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்
இது போன்ற தகவல்களுக்கு தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.