BIGG BOSS 6: விஜய் டிவியில் ஓளிப்பரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு உலகம் முழுக்க உள்ள தமிழர்களின் பேராதரவு இருப்பது அனைவரும் அறிந்ததே. பிக்பாஸ் சீசன் 6ன் வெற்றியாளராக தொலைக்காட்சி தொடரின் நடிகர் அசீம் பெற்றார். இவர் முன்கோபம் உள்ள நபராக இருந்தாலும் தனது கருத்தை ஆணித்தனமாக ஓத்துக் கொண்டு தான் இப்படி தான் என்று கூறி வாதம் செய்து வந்தார் டைட்டிலையும் வென்றார்.
இந்த சீசனில் வெற்றியாளர் யார் என்பதை இறுதி வரை கசிய விடாமல் கொண்டு சென்றது வியப்புக்குரியதாகவும் அனைவரையும் கவர்ந்ததாகவும் இருந்தது. உலக நாயகன் விக்ரமன் மற்றும் அசீமை சரிசமமான தராசாக பார்த்திற்கிறார். மக்களும் அவருக்கு ஏகப்பட்ட ஓட்டுகளை அளித்து அசீமை வெற்றி பெற செய்துள்ளனர்.
வெற்றி பெற்ற அசீமீற்கு 50 லட்சம் பரிசும் ஓரு காரும் பரிசாக அளிக்கப்பட்டது. இதில் விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகிய இருவரில் ஓருவர் வின்னராக அறிவிக்கப்படுவார் என்று அதிக மக்கள் எதிர்பார்த்த நிலையில் ஓட்டுகளின் அடிப்படையில் அசீமே வென்றார்.

விக்ரமன் ரன்னராக அறிவிக்கப்பட்டார். அவர் பேசுகையில் அறம் வெல்லும் என்று கூக்குரல் இடுகின்றனர். சிறிது யோசித்து விக்ரமன், “காலம் பூராவும் போராடிட்டே இருக்கக்கூடிய குணம் கொண்டவன் நான். இந்த போராட்டம் தொடரும். மக்களுக்கான பயணம் தொடரும் என்று கூறினார். அப்போது மக்கள் கைதட்டி அவருக்கு உற்சாகம் ஊட்டினர்.
உலகம் பூராவும் பரவி வாழக்கூடிய தாய் தமிழர் சொந்தங்கள் ஆகிய அனைவரும் தந்த தீர்ப்பையும் தலைவணங்கி மனமாற ஏற்கிறேன் என்று தலை சாய்த்து வணங்குகிறார். இப்போதும் அறம் வெல்லும் என்று கையை தூக்கி விக்கிரமன் கூற அதற்கு கமல்ஹாசன் இது உங்கள் வெற்றிக்கான முதல் படி இதை இப்போதும் சொல்கிறேன் அறமே வெல்லும் என்று கூறினார்.
இதையும் படியுங்கள்: BIGG BOSS 6 : டைட்டில் வின்னராகியுள்ள அசீம் அடுத்தது செய்யப்போவது என்ன?
இது போன்ற தகவல்களுக்கு தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.