பிக் பாஸ் சீசன் 6 விரைவில் தொடக்கம் பிக்பாஸில் மீண்டும் கமல்

0
19

பிக் பாஸ் சீசன் 6 : விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது. இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சி ஐந்து சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. தற்போது 6வது சீசனுக்கான ப்ரமோ வெளியாகியுள்ளது. கடந்த சீசன்களின் ப்ரமோக்களை காட்டிலும் 6வது சீசனின் ப்ரமோவை மிகவும் வித்தியாசமாக காட்டியுள்ளனா். கமல் அவர்கள் கடந்த ஐந்து சீசன்களின் ப்ரமோக்களில் கண்களை மட்டுமே அடையாளமாக காட்டியிருப்பார். ஆனால் தற்போது சீசன் 6ல் பாம்பு, கழுகு போன்ற மிருகங்களை சுட்டிகாட்டி பேசியுள்ளது ப்ரமோவை வித்தியாசமாக காண்பிக்கிறது.

ஏற்கனவே நடந்த சீசன்களில் சீசன் 1ல் ஆரவ், சீசன் 2ல் ரித்திகா, சீசன் 3ல் முகைன் ராவ், சீசன் 4ல் ஆரி மற்றும் சீசன் 5ல் ராஜூவும் வெற்றி பெற்றனர். இந்த ஐந்து சீசன்களையும் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கினார். சீசன் 5ன் இடையே கமல்ஹாசன் அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாக இரண்டு மூன்று வாரங்களுக்கு மட்டும் நடிகை ரம்யாகிருஷ்ணன் அவர்கள் தொகுத்து வழங்கினார்.

பின்னா் விஜய் தொலைக்காட்சி பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியை டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் தொடங்கியது. இதில் ஏற்கனவே பிக்பாஸ் சீசன்களில் கலந்து கொண்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை தொடக்கத்தில் கமல் அவர்கள் தொகுத்து வழங்கினாா். பின்னா் சில காரணங்களினால் கமல் அவா்கள் இந்நிகழ்ச்சியை விட்டு விலகி அவருக்கு பதிலாக நடிகர் சிம்பு அவர்கள் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா்.

அந்த காரணத்தினால் கமல் அவர்கள் பிக்பாஸை விட்டு விலகிவிட்டாரோ என்று இரசிகர்கள் கருதிய நிலையில் பிக்பாஸ் சீசன்6 ப்ரமோ இரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கமல் அவர்கள் மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது  மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிக்பாஸ் சீசன் 6ல் விஜய் தொலைக்காட்சி பிரபலங்கள் ஜாக்குலின், ரக்ஷ்ன், ராஜலட்சுமி ஆகியோர் கலந்து கொள்ளப்  போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் அக்டோபர் மாதம் பிக்பாஸ் சீசன் 6 தொடங்க உள்ளதால் அதைக் காண இரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.bigg boss season6

இதற்கு முந்தைய பிக்பாஸ் சீசன்களி்ல் தொலைக்காட்சி பிரபலங்கள் மட்டுமே பங்கேற்று வெற்றி பெற்றுள்ளனர்.  ஆனால் தற்போது சீசன் 6ல் பொதுமக்களும் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த சீசன் மேலும் விறுவிறுப்படைய தொடங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here