BIGG BOSS 6 TAMIL: விஜய் டிவியில் மிக பிரபலமான நிகழ்ச்சிகளில் ஓன்று பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த நிகழ்ச்சியை ஆரம்பம் முதலே உலக நாயகன் கமலஹாசனே தொகுத்து வருவது நாம் அறிந்ததே. இந்த பிக்பாஸ் நிகழ்ச்சிகள் முதலில் வெளிநாட்டில் தோன்றியது பின்னர், இந்தியாவில் இந்தியில் தொடர்ந்து நடத்தப்பட்டது. இதற்கு மக்களிடையே பெரும் ஆதரவை அறிந்த தமிழில் விஜய் தொலைக்காட்ணி தற்போது வரை 5 சீசன்களை முடித்து 6 வது சீசனையும் வெற்றிகரமாக முடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த சீசன் டைட்டில் வின்னர் யாராக இருப்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வந்த நிலையில் சீரியல் நடிகர் அசீம் இந்த டைட்டிலை வென்று அசத்தியுள்ளார். இந்நிலையில், 103 நாட்களை கடந்து ஹவுஸ்மெட்டுகளுடன் இருந்து வந்த அமுதவாணன் பிக்பாஸ் சீசனிலியே முதன் முறையாக இரண்டாவது முறை வைக்கப்பட்ட பணப்பெட்டியை சாதுர்யமாக எடுத்து சென்றார்.

முதலாவதாக பணப்பெட்டியை வைத்ததுமே நிகழ்ச்சி தொகுப்பாளர் கதிரவன் மூன்று லட்சம் இருந்த போதே யாரும் எதிர்பாராத நேரத்தில் கிடைத்தை எடுத்து கொள்வோம் என்று அதை எடுத்து கொண்டு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் விக்ரமன், அசீம், ஷிவின், அமுதவாணன், மைனா நந்தினி என 5 கண்டன்ஸ்டன்ட் இருந்து வந்தனர்.
பிக்பாஸ் வரலாற்றிலேயே இரண்டாவது முறையாக பணப்பெட்டி வைத்தது இந்த சீசனில் தான் இதை மைனாவும் அமுதாவும் கூர்ந்து நோக்கி வந்தனர். மைனா 18 லட்சத்திற்கு மேல் வரும் போது எடுத்து விடலாம் என்று நினைத்து இருந்த போது அமுதா 11.75 லட்சம் வரும் போதே உஷாராகி இந்த தொகை போதும் என்று எடுத்து சென்றார்.
காத்திருந்த மைனாவிற்கு இரவில் எவிக்ஷ்ன் எனக் கூறி பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளேயேற்றினார். இதனால் ஏமாற்றத்தை சந்தித்து எவிக்ஷன் ஆகி வெளியேறினார். இந்த நிலையில் அமுதவாணன் இந்த நிகழ்ச்சியில் பல டாஸ்கில் சிறப்பாக செயல்பட்டார். பிக்பாஸ் ரசிகர்களை நகைச்சுவையால் மகிழ்வித்து வந்தார். ஆனாலும், டைட்டில் வின்னராக முடியாது என்பதை உணர்ந்த அமுதவாணன் பணப்பெட்டியுடன் வெளியேறினார்.
இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கு ஒவ்வொரு நாளுக்கும் 25 ஆயிரம் ரூபாய் ஊதியமாக பேசப்பட்டதாக கூறப்படுகிறது. அதனை கணக்கில் எடுத்துக் கொண்டால் 103 நாட்களுக்கும் சேர்த்து 25 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெற வாய்ப்பு இருக்கிறது. அத்துடன் பண மூட்டையில் கிடைத்த 11,75 லட்சம் ரூபாயை சேர்த்து கணக்கிட்டால் ஏறத்தாழ 37 லட்சம் ரூபாய் மொத்தமாக அமுதவாணனுக்கு பிக்பாஸ் வீட்டில் கிடைத்திருக்கும் என கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்: BIG BOSS 6: பணப் பையில் இருந்த பணத்துடன் வெளியேறிய கதிர் எவ்வளவு சம்பாதித்தார்
இது போன்ற பல தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.