நீ ஓரு அட்டகத்தி என்றும் ஸ்டாராங்கான ப்ளேயரே நீ இல்லை என்றும் அசீமை கூறிய விக்ரமன் பதிலுக்கு அசீம் என்னை பற்றி பேசி பாப்புலர் ஆகிவிடலாம் என்று நினைக்கறீர்கள் நடக்கட்டும் எனக் கூறிய ப்ரோமோ வெளியாகி வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் ஓளிப்பரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி பெரும் ரசிகர்களை கவர்ந்த நிகழ்ச்சியாகும். இதுவரை பிக்பாஸ் 5 சீசன்களை முடித்து தற்போது 6வது சீசன் நடந்து கொண்டு இருக்கின்றது. இதில் முதன் முறையாக 20 நபர்கள் களமிறக்கப்பட்டனர். ஓவ்வொரு வாரமும் ரசிகர்கள் தரும் ஓட்டின் அடிப்படையில் ஓருவரை இந்த பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுவார்.
இந்த சீசன் தொடங்கிய முதல் நாள் முதலே சண்டைகளும் பிரச்சனைகளுமாய் இருந்து வருகிறது. அதிலும் அடிக்கடி சிக்குபவர் அசீம் எப்போதும் அனைவரிடமும் சண்டையை போட்டுக் கொண்டு இருப்பார். எந்த டாஸ்கை நடத்தினாலும் அதில் எந்த வகையிலாவது பிரச்சனையை உண்டாக்குவார்.

இந்நிலையில், பிக்பாஸ் ஏலியன்ஸ் பழங்குடியினர் என இரு அணிகள் உருவாக்கினர். அதில் டாஸ்க்குகளையும் கொடுத்து பகடைக் காயை சூழற்றினார் பிக்பாஸ் அமுதவாணன் அசீம் இடையே ஏற்பட்ட பிரச்சனை கைகலப்பாக மாறியது. இதனால் பிக்பாஸ் தொடரில் பெரும் பிரச்சனை எழுந்தது.
இந்த நிகழ்ச்சியில் டாஸ்க்கில் மோசமாக விளையாடியவர்களை சிறையில் அடைப்பது வழக்கம். அந்த வகையில் நேற்றுடன் டாஸ்க்கு முடிந்தது பிக்பாஸ் யார் அதிக மோசமாக விளையாடினார் என கேள்வி கேட்டதும் விகரமன் எழுந்து அசீம் மோசமாக விளையாடினார் எனவும் அமுதவாணன் கண்ணத்தில் கை வைத்தது தவறு என்றும் கூறினார். மேலும், அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பதற்காகவே அவர் இது போன்று செய்கிறார் என்றார்.
இதையடுத்து வரும் அசீம், விக்ரமன் பெயரை தேர்ந்தெடுக்கிறார். நான் ஒரு ஸ்ட்ராங் ஆன போட்டியாளர், என்னைப்பற்றி பேசினால் பாப்புலர் ஆகிவிடலாம் என்பதற்காக நீங்கள் அப்படி பேசுகிறீர்கள் என விக்ரமனை பார்த்து கூறுகிறார் அசீம்.
இதையும் படியுங்கள்: பிக்பாஸ் சீசன் 6: இந்த வார டாஸ்க்கால் கைகலப்பான பிபி வீடு
அசீம் சொன்னதைக் கேட்டு சிரிக்கும் விக்ரமன், உடனடியாக எழுந்து வந்து, என்னைப் பொறுத்தவரை நீங்க ஒரு அட்டக்கத்தி தான் ஸ்ட்ராங் பிளேயர்லாம் கிடையாது என தரமான பதிலடி கொடுக்கிறார். அசீம் – விக்ரமன் இடையேயான இந்த புரோமோ தான் தற்போது சோசியல் மீடியாவில் செம்ம வைரல் ஆகி வருகிறது.
இது போன்ற செய்திகளை உடனுக்குடன் அறிய தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.