பிக்பாஸ் சீசன் 6ல் இறுதி நாள் வரை வலம் வந்த திருநங்கை ஷிவின் தற்போது நடிகையாக நடித்து வருகிறார்.
BIGG BOSS சீசன் 6ல் டைட்டில் வின்னராக தொலைக்காட்சி தொடர் பிரபலம் அசீம் வெற்றி பெற்று 50 லட்சம் தொகை மற்றும் காரினை பரிசாக பெற்றார். இரண்டாவதாக விக்ரமன் வந்தார் அறம் வெல்லும் என்று அடிக்கடி கூறி வந்த அவர் இந்த சீசனில் டைட்டில் வின்னராக இருப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் அசீம் வென்றார். தொடர்ந்து முதன் முறையாக களமிறக்கப்பட்ட மூன்றாம் பாலினத்தவரான திருநங்கை ஷிவின் மூன்றாம் இடம் பிடித்து சரியான போட்டியாளராக இருந்தார்.
இந்த சீசனில் அதிகம் மக்களால் அறியப்படாத நபர்கள் நியமிக்கப்பட்டவர்களில் விக்ரமன், தனலட்சுமி, திருநங்கை ஷிவின் ஆகியோர். இவர் முதன் முறையாக சீசன் 6ல் போட்டியாளராக நியமிக்கப்பட்டதுடன் இறுதி வரை தனது விடாமுயற்சியால் வந்தை அனைவரும் பாராட்டி வந்தனர்.

இந்நிலையில், விஜய் டிவி தொடரில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதை அவரும் வரும் வாய்ப்பை தவற விடக்கூடாது என்ற வகையில் ஓப்புக் கொண்டுள்ளார். விஜய் டிவியில் மிக பிரபலமான தொடர்களில் ஓன்றான பாரதி கண்ணாமா சீரியலில் கெஸ்ட் ரோலில் இடம் பெற்று இருப்பதாக கூறப்படுகிறது.
பாரதி கண்ணம்மா தொடர் பல ஆண்டுகளாக தொடர்ந்து ஓளிப்பரப்பாகி மக்கள் மனதில் இடம் பெற்றுள்ளது. இந்த நிலையில் அந்த தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்நிலையில் திருநங்கை ஷிவின் கெஸ்ட் ரோலில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு பின்னர் படங்களில் வாய்ப்பு கிடைக்குமானால் நடிக்கவும் தயார் என கூறப்படுகிறது.
விஜய் டிவியில் ஏதாவது ஓரு நிகழ்ச்சியில் வந்து மக்களிடம் இடம் பிடித்தால் போதும் அடுத்தது படங்கள் மற்றும் சிறப்பான இடத்திற்கு போயிடலாம் என்பது அனைவரும் அறிந்த ஓன்றாக உள்ளது. எடுத்துக்காட்டு ஜி.பி.முத்து, புகழ், பாலா என நிறைய பேர் உள்ளனர்.
இதையும் படியுங்கள்: மெரினா கடலில் பேனா சின்னம் வைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்த சீமான்
இது போன்ற தகவல்களுக்கு தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.