தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்று குறிப்புகள்

0
19

தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்று குறிப்புகள்: ”தொண்டு செய்து பழுத்த பழம் தூய தாடி மார்பில் விழும்” எனற சொல்லுக்கு சொந்தகாரர் ஈ.வே.இராமசாமி என்கின்ற தந்தை பெரியார். பகுத்தறிவு பகலவனாக வலம் வந்தவர். சமூக இழிவுகளை துடைத்தெரிய தவறாதவர். மனித பூர்வக்குடிகளை பாதிக்கும் எவ்வித செயல்களையும் தவறாமல் தட்டி கேட்பவராக இருந்தவர்.

சமூகநீதியும் சுய மரியாதையும் இரு கண்களாக கொண்டு நடந்தவர். இந்திய விடுதலைக்கும் மனித விடுதலைக்கும் சாதி, மத பாகுப்பாட்டுக்கும் எதிராக குரல் கொடுத்தவர். பெண்கள் சரிசமமாக மதிக்கப்பட வேண்டும் என்ற கொள்கை உடையவர் அறியப்படுபவர் தந்தை பெரியார் இன்று அவரின் 114 வது பிறந்த நாளில் அவரின் வாழ்கை வரலாற்றை இப்பதிவின் மூலம் அறியலாம்.

இதையும் கவனியுங்கள்: பாவேந்தர் பாரதிதாசனின் வாழ்க்கை வரலாறு

தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்று குறிப்புகள்

பெரியாரின் பிறப்பு மற்றும் குடும்பம்:

1879 ஆம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி அன்று தந்தை வெங்கட்ட நாயக்கருக்கும் தாய் சின்னதாயிக்கு மகனாக பிறந்தார். இவரின் இயற்பெயர் ஈரோடு வெங்கட்ட இராமசாமி நாயக்கர் என்பதாகும். கிருஷ்ணசாமி என்ற சகோதரனும் கண்ணம்மா மற்றும் பொன்னுதாயி என்ற சகோதரிகளும் இருந்தனர். இவரது குடும்ப பின்னணி பெரிய பணக்கார குடும்பமாக நல்ல வசதி நிறைந்தவராகவும் இருந்து உள்ளனர்.

பெரியாரின் ஆரம்பகால வாழ்க்கை:

தந்தை பெரியார் தன் படிப்பை ஐந்தாம் வகுப்பு முடிந்தவுடன் நிறுத்தி கொண்டார். தனது 19ம் வயதில் திருமணம் செய்து கொண்டார். சில வருடங்களில் அவருக்கு ஓரு பெண் குழந்தை பிறந்தது சில மாதங்களிலேயே அக்குழந்தை இறந்தது. அதன்பின், 1902 ஆம் ஆண்டுகளில் கலப்புத் திருமணங்களை நடத்தி வைக்க தொடங்கினார். அவர் தந்தைக்கும், அவருக்கும் சில விஷயங்களில் மனக்கசப்பு ஏற்பட துறவு பூண்டு காசிக்கு சென்றார் தந்தை பெரியார். காசியில் அவருக்கு நடந்த நிகழ்வுகளால் இறை மறுப்பாளராக தன்னை மாற்றிக் கொண்டார்.

வைக்கம் வீரராக பெரியார்:

ஆரம்ப காலத்தில் காந்தி கொள்கைகளில் ஈடுபாடு கொண்டு 1919-ம் ஆண்டு தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டார். காந்தி தலைமையில் காங்கிரஸ் நடத்திய பல போரட்டங்களில் கலந்துக்கொண்டு சிறை சென்றார். 1922-ம் ஆண்டு சென்னை மாகாண காங்கிரஸ் கட்சி தலைவராக தந்தை பெரியார் தேர்தெடுக்கப்பட்டார். பிறகு 1925-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியை விட்டு விலகினார்.

கேரளாவில் வைக்கம் என்னும் ஊரில் கோயிலுக்குள் நுழையவும், கோயில் வீதியில் நடக்கவும் தலித் மக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்த தடையை எதிர்த்து நடந்த போரட்டத்தில் தந்தை பெரியார் கலந்து கொண்டு சிறை சென்றார். இந்த போராட்டதிற்கு பிறகு பெரியார் ‘வைக்கம் வீரர்’ என்று அழைக்கப்பட்டார்.

திராவிட கழகத்தை தோற்றுவிப்பு:

1925-ம் ஆண்டு சுயமரியாதை இயக்கத்தை தொடங்கினார். தன்னுடைய குடி அரசு நாளிதழையும் தொடங்கினார். 1939 ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டத்தினால் சிறை வைக்கப்பட்டிருந்த இராமசாமி விடுதலையானதும், நீதிக்கட்சியின் தலைவர் பொறுப்பை ஏற்றார். பின்னர் நீதிக்கட்சி என்ற பெயரை 1944-ம் ஆண்டு திராவிட கழகம் என பெயர் மாற்றினார் பெரியார். திராவிட கழகத்தின் கொள்கைகள் வெகு விரைவில் மக்களிடத்தில் சேர்ந்ததார்.

தாடி வளர்ப்பு பற்றி மனம் திறந்த பெரியார்:

ஈ.வே.ராமாமியாகிய தந்தை பெரியாரின் அடையாளமாக அவரது முகத்தின் தாடி அறியப்பட்டது. மார்பில் விழும் அளவிற்கு அவரது தாடி வளர்ந்தை கண்டு பலரும் பலவாறு கிண்டல் அடித்தும் வந்தனர். அவரது நண்பர்கள் வட்டாரமே பெரியாரின் தாடி பற்றி சிறிய நகைச்சுவை பட்டிமன்றமே நட்த்தினர். அவரவரும் அவரது கருத்தையும் திரித்து கூறி நகைச்சுவையாக பேசினர்.

ஓரு நாள் கி.ஆ.பெ. விஸ்வநாதன் தந்தை பெரியாரிடம் சென்று தாடி பற்றிய வினாவை கேட்டார். அதற்கு பெரியார் அறிவித்த பதில் அனைவரது மனதையும் அதிர வைத்தது. அதற்கு பதிலளித்த பெரியாரோ, தினமும் பத்து நிமிடம் வீதம் மாதம் 300 நிமிடங்கள் வீணாகிறதே. பல நல்ல காரியங்களை இந்த நேரத்தில் செய்யலாமே என்று நினைத்து விட்டு விட்டேன். அது தானாக வளர்ந்துவிட்டது. வேறெதுவும் காரணம் இல்லை என்று கூறியிருக்கிறார்.

இதனிடையே ஒரு முறை ரயில் நிலையத்திலிருந்து பெரியார் வெளியே வந்த போது எதிரில் அவரை சந்தித்த ஒருவர், அய்யா நீங்கள் ஏன் தாடி வைத்துள்ளீர்கள் என்று கேட்டிருக்கிறார், அதற்கு எனக்கு பிளேடு செலவு மிச்சம், நான் தாடி வளர்ப்பதால் உனக்கு என்ன நஷ்டம் என்று வினவியுள்ளார். பெரியாரை பொறுத்தவரை எதையுமே முற்போக்காக சிந்திக்கக்கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தீண்டாமை ஓழிப்பாளராக:

தான் மரணித்து மண்ணுக்குள் புதைக்கப்படும் வரை என் மக்களை சாஸ்திரங்களின் படி கீழ்ஜாதி மக்களாகவும் அரசியல்படி அடிமைகளாகவும் விட்டுச் செல்கிறேனே என்று புலம்பியவர் தந்தை பெரியார். திராவிடர் கழகம் தலித்துக்களுக்கு எதிராகப் பயன்படுத்தபடும் தீண்டாமையை மிகத்தீவிரமாக எதிர்ப்பதிலும், ஒழிப்பதிலும் முனைப்புடன் செயல்பட்டார்.

பெண்கள் உரிமை, பெண் கல்வி, பெண்களின் விருப்பத்திருமணம், கைம்பெண் திருமணம், ஆதரவற்றோர் மற்றும் கருணை இல்லங்கள் போன்ற செயல்களில் ஈடுபட்டனர். 1952-ம் ஆண்டு பிள்ளையார் உருவ பொம்மைகளை உடைத்தது மட்டுமல்லாமல், இந்துக்களின் கடவுளாக கருதப்பட்ட ராமரின் உருவப்படம் எரிப்புப் போராட்டத்தையும் நடத்தினார்.

தந்தை பெரியாரின் இறப்பு:

தந்தை பெரியார், டிசம்பர் 24-ம் தேதி 1973-ம் ஆண்டு, தனது 94வது வயதில் காலமானார்.வசதியான, முற்பட்ட சாதியாகக் கருதப்பட்ட நாயக்கர் என்ற சமூகத்தில் பிறந்திருந்தும், சாதிக் கொடுமை, தீண்டாமை, மூடநம்பிக்கை, வர்ணாஸ்ரம தர்மம் கடைப்பிடிக்கும் பார்ப்பனியம், பெண்களைத் தாழ்வாகக் கருதும் மனநிலை போன்றவற்றை எதிர்த்து மக்களுக்காகக் குரல் கொடுத்தவராக வாழ்ந்தவர் தந்தை பெரியார்.

இது போன்ற தகவல்களையும் ஆன்மீகம், தமிழ் இலக்கியம், ஜோதிடம், செய்திகள் என அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள தலதமிழ் இணையதளத்தை நாடுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here