இந்தியர்கள் அதிகம் விரும்பி உண்ணும் உணவு வகைகளில் பிரியாணி முதல் இடத்தில் உள்ளது. ஓவ்வொரு ஆண்டின் இறுதியிலும் எந்த உணவு வகையினை அதிகம் விரும்பி ஆர்டர் செய்துள்ளனர் என்ற ஆய்வை ஸ்விகி நிறுவனம் வழங்கும் அதில் பிரியாணி முதல் இடத்தை பெற்றுள்ளது.
இந்திய மக்கள் விதவிதமான உணவு வகைகளை விரும்பி உண்ணுவர். அப்படி உண்ணும் உணவில் மிகவும் பிடித்த உணவாக இருந்தால் அதை எப்பொழுதும் மீண்டும் மீண்டும் உண்டு மகிழ்வர். அந்த வகையில் பிரியாணிக்கு இந்திய மக்களிடம் தொடர்ந்து 7 ஆண்டுகளாக மவுசு குறையாமல் இருந்து வருகிறது.
இந்தியாவில் ஆன்லைன் மூலம் உணவு டெலிவிரி செய்யும் மிக பெரிய நிறுவனம் ஸ்விகி. இந்த நிறுவனம் ஓவ்வொரு ஆண்டின் முதல் மாதத்தலிருந்து இறுதி மாதம் வரை எந்த வகையான உணவுகள் அதிகம் விற்பனையானது என்ற தகவலை வெளியிடும்.

இதில் கடந்த ஆறு ஆண்டுகளாக பிரியாணி முதல் இடத்தில் இருந்தது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பட்டியலை தயார் செய்து வெளியிட்டது. அதில் இந்தியர்கள் அதிகம் ஆர்டர் செய்த உணவாக பிரியாணி முதலிடம் பிடித்துள்ளது. ஆறு ஆண்டுகளைத் தொடர்ந்து ஏழாவது ஆண்டாகவும் பிரியாணியே முதல் இடத்தை தக்கவைத்துள்ளது. நாடு முழுவதும் நிமிடம் ஒன்றிற்கு 137 பிரியாணி ஆர்டர்கள் வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இரண்டாவது இடத்தில் மசால் தோசையும் மூன்றாவது இடத்தில் சிக்கன் ரைஸ்சும் இடம் பெற்றுள்ளது. இறைச்சி வகைகளில் சிக்கன் 29 லட்சத்து 86 ஆயிரம் ஆர்டர்களுடன் முதல் இடத்தில் உள்ளது. இறைச்சியை அதிகமாக வாங்கிய நகரங்களின் பட்டியலில் பெங்களூர் முதல் இடத்திலும் ஹைதராபாத் மற்றும் சென்னை இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களில் உள்ளன.
இந்த நிறுவனத்தில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளில் சிக்கன் பிரியாணி, மசாலா தோசை, சிக்கன் ப்ரைடு ரைஸ், பனீர் பட்டர் மசாலா, பட்டர் நான், வெஜ் பிரைட் ரைஸ், வெஜ் பிரியாணி, தந்தூரி சிக்கன். மேலும், அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட வெளிநாட்டு உணவுகளில் இத்தாலிய பாஸ்தா, பீஸ்ஸா, மெக்சிகன் பவுள், காரமான ரமேன் மற்றும் சுஷி. இதை போல, நொறுக்குத் தீனிகளில் முதலாவதாக இடம் பெறுவது சமோசா முதல் இடத்தை வகிக்கிறது.
இதையும் படியுங்கள்: புதினா இலையின் பயன்கள் மற்றும் மருத்துவ குணங்கள்
இது போன்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.