உடல் பளபளப்பாக இயற்கையான வழிமுறைகள்

0
10

பியூட்டி பார்லருக்கு சென்று நம் உடலையும், முகத்தையும் பளபளப்பாக்க பல ஆயிரம் செலவு செய்வதற்கு பதிலாக நம் வீட்டில் உள்ள இயற்கையான பொருட்களை வைத்து நம் உடலையும், முகத்தையும் பளபளப்பாக்க சில வழிமுறைகள்.

 • தினமும் காலையில் தண்ணீரில் தேன் கலந்து குடித்து வந்தால் உடல் பளபளப்பாகும்.
 • சிறுபயிறு, கடலைமாவு, தேன் கலந்து குளித்து வர உடல் அழகு பெறும்.
 • அறுகம்புல் சாற்றில் மஞ்சள் கலந்து கால்களில் தேய்த்தால் கால்களின் கடினத்தன்மை குறையும்.
 • ஆலிவ் எண்ணெயில் ஒரு முட்டை கலந்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் தலைமுடி உதிர்வது குறையும்.
 • தர்பூசணி பழத்தின் அடியில் இருக்கும் வெள்ளை பகுதியினை கால்களுக்கு தேய்க்க கால்கள் மிருதுவாக மாறும்.
 • தயிர், முட்டை, எலுமிச்சைச்சாறு கலந்து தலைக்கு தேய்த்துக் குளிக்க பொடுகு குறையும்.
 • திராட்சை சாற்றை கொண்டு கழுத்துப் பகுதியை மசாஜ் செய்ய கழுத்திலுள்ள கருமை குறைந்து கழுத்து அழகாகும்.
 • பீட்ரூட்டை உதட்டில் அடிக்கடி அழுத்தித் தேய்த்து வர இதழ்கள் சிவப்பாகும்.
 • தர்பூசணி பழச்சாறு, பயித்தமாவு இரண்டையும் கலந்த கலவையை முகத்தில் பூசி வந்தால் முகம் புதுப்பொலிவு பெறும்.
 • எலுமிச்சைச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் பற்கள் பளிச்சென மாறும்.
 • body and face beauty tips

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here