ஜெயிலர் படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர் அதிகாரப்பூர்வ தகவல்

0
5

ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் ஏற்கனவே மோகன்லால், சிவராஜ்குமார், சுனில் ஆகிய முக்கிய நடிகர்கள் நடிக்கவுள்ள நிலையில் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப் நடிக்கவுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தின் புதிய புதிய அப்டேட் கொடுத்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. ஜெயிலர் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ். இப்படத்தை பீஸ்ட், டாக்டர் திரைப்படங்களை இயக்கிய நெல்சன் தீலிப் குமார் இயக்கி வருகிறார். இவர் இயக்கத்தில் வெளியான நடிகர் விஜயின் பீஸ்ட் திரைப்படம் பல்வேறு விதமான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்தை வைத்து திரைப்படம் உருவாக உள்ளதாக கூறிய நெல்சனை நெட்டிசன்கள் கலாய்த்து பல புரளியை கிளப்பினர். ஆனால், இவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ரஜினிகாந்தே நெல்சனை தொடர்பு கொண்டு படத்தில் நடிக்கவுள்ளதை உறுதிப்படுத்தினார்.

உற்சாகம் அடைந்த நெல்சன் படத்தின் படப்பிடிப்பு பணிகளை தொடர்ந்து நடத்தி வந்தார். இப்படத்தின் தயாரிப்பு பணியை அண்ணாத்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இதையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரித்து வருகிறது.

இப்படத்தில் சூப்பர் ஸ்டாரை மாஸ் நிறைந்த கதைக் களத்தில் அமர வைத்து ரசிகர்களை கைத்தட்ட ஆராவாரமான பணிகளை இயக்குனரும் படக்குழுவினரும் சேர்ந்து செய்து வருகின்றனர். இப்படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி, மலையாள நடிகர் மோகன் லால், புஷ்பா பட நடிகர் சுனில், கன்னட நடிகர் சிவராஜ்குமார் போன்ற முக்கிய நாயகர்கள் நடிக்கின்றனர். மேலும், பாலிவுட்டின் உச்சநட்சத்திரமாக விளங்கும் ஜாக்கி ஷெராஃப் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது தயாரிப்பு நிறுவனம்.

இந்த தகவலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி நடிகர்கள் சேர்ந்து நடிக்கும் முதல் தமிழ் திரைப்படம் என்ற பெருமையை ரஜினியின் ‘ஜெயிலர்’ அடைந்துள்ளது. பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது. இதனால் மாஸான காட்சிகளில் ரஜினிகாந்த் நடித்து மிகப் பெரிய வெற்றியை கொடுக்க காத்திருக்கின்றது இப்படம்.

இதையும் படியுங்கள்: தளபதி 67 படத்தின் மாஸ் டைட்டில் ப்ரோமோவை வெளியிட்டது படக்குழு

இது போன்ற தகவல்களுக்கு தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here