கங்கனா ரணாவத்: இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது அவசர நிலையை பிரகடனம் செய்தார். அதை பின்னணியாகக் கொண்டு ‘எமர்ஜென்சி’ என்ற படத்தை கங்கனா தயாரித்து, இயக்கி அவரே இந்திரா காந்தியாக நடித்துள்ளார். இது குறித்து கங்கனா கூறியதாவது,
எமர்ஜென்சி படத்தை என்னால் தொடங்க முடியுமா என பலரும் கேட்டார்கள். நானே தயாரித்து, இயக்கப் போகிறேன் என்று சொன்னபோது சிரித்தார்கள். காரணம் என்னால் அது முடியாது என்று நினைத்தார்கள். அதேபோல் அந்த நேரத்தில் பணம் இல்லாமல் தவித்தேன். யாரும் கடன் தர முன்வரவில்லை. நான் சம்பாதித்த பணத்தையெல்லாம் வீடு வாங்கவும், அன்றாட செலவுகளுக்கும் செலவழித்துவிட்டேன். அதனால் சேமிப்பு என எதுவும் வைக்கவில்லை. அதனால் எனது சொத்துக்களை அடமானம் வைத்து இந்த படத்தை தயாரித்து முடித்துள்ளேன்.
இதை யாரிடமும் சொல்லக்கூடாது என நினைத்தேன். காரணம் இதை முன்பே சொல்லியிருந்தால் எள்ளி நகையாடியவர்கள் சந்தோஷம் அடைந்திருப்பார்கள். எனக்கு ஆதரவு தரும் ரசிகர்கள் கவலை அடைந்திருப்பார்கள். அதனால் படம் முடிந்த பிறகு சொன்னால் முடியாது என்பது எதுவும் இல்லை என்பதை நான் நிரூபித்திருக்கிறேன் என்று மற்றவர்களுக்கு புரியும். அதனால்தான் இதை இப்போது கூறுகிறேன். இந்த படத்தால் வருமானம் கிடைத்ததும் அடமானம் வைத்த சொத்துக்களை மீட்பேன் என்று அவர் நம்பிக்கையுடன் கூறினார்.