ராம் சரண்: ‘ஆர்ஆர்ஆர்’ படத்துக்கு பிறகு ராம்சரண் நடிப்பில் ‘ஆச்சார்யா’ படம் வெளியானது. இதில் சிரஞ்சீவி ஹீரோவாக நடித்தார். கவுரவ வேடத்தில் ராம்சரண் நடித்திருந்தார். இப்போது ஷங்கர் இயக்கி வரும் கேம் சேஞ்சர் படத்தில் ராம்சரண் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு 80% முடிந்துவிட்டது. இதையடுத்து மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் படத்தில் ராம் சரண் நடிக்கிறார். தெலுங்கில் விஜய் சேதுபதி நடித்த உப்பென்னா படத்தை இயக்கிய புச்சிபாபு சனா, இந்த படத்தை இயக்க உள்ளார்.
புஷ்பா படத்தின் இயக்குனர் சுகுமார் இந்த படத்துக்கு வசனங்களை எழுதுகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ராம்சரணுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை மிருணாள் தாக்கூர் நடிக்கிறார்.
மிருணாள் இதற்கு முன்பு சீதா ராமம் படத்தில் துல்கர் சல்மான் ஜோடியாக நடித்தவர். சீதா ராமம் படத்திற்கு பிறகு அவருக்கு பல தென்னிந்திய பட வாய்ப்புக்கள் வந்தன. அதில் பல படங்களை அவர் ஏற்கவில்லை. கதை நன்றாக இருந்தால் மட்டுமே படத்தை ஏற்பேன் என்று கூறிவந்த மிருணாள் தற்போது இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.