ஊர்வசி ரவுட்டேலா: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த திறப்பு விழா நிகழ்ச்சிக்கு பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுட்டேலா வந்தார். அவரை ஏராளமான ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு செல்ஃபி எடுத்துக் கொண்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. ரசிகர்களுடன் ஊர்வசி ரவுட்டேலா செல்பி எடுத்துக்கொண்ட பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த கேக்கை வெட்ட முயன்றார். அப்போது அங்கிருந்த பெண் ஒருவர் மெழுகுவர்த்தி ஏற்றியபோது திடீரென மெழுகுவர்த்தியின் தீயானது அந்தப் பெண்ணின் முகத்தில் பரவியது. அதனால் அந்த பெண்ணின் தலைமுடியும் எரிந்தது. அதைப் பார்த்து அலறிய ஊர்வசி ரவுட்டேலா அங்கிருந்தவர்களுடன் சேரந்து அந்தப் பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
அதன்பின் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. அதுமட்டுமல்லாமல் மருத்துவமனைக்கு அந்தப் பெண் சென்ற பிறகும் அவரிடம் ஊர்வசி செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். முன்னதாக கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்- ஊர்வசி ரவுட்டேலா ஜோடி டேட்டிங்கில் இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் இருவரும் டேட்டிங் குறித்து எந்த உறுதியான தகவலையும் வெளியிடவில்லை. அதே நேரம் ரிஷப் பண்ட் விபத்தில் சிக்கியபோது மும்பை மருத்துவமனையில் அவரை ஊர்வசி ரவுட்டேலா சென்று பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.