மெஸ்சியை கார் ஏற்றி கொன்று விடுவேன் என மெக்சிக்கோ குத்து சண்டை வீரர் மிரட்டல் தான் அர்ஜெண்டீனாவை மதிப்பது போல் அவரும் மெக்சிக்கோவை மதிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
அர்ஜெண்டினா அணியின் அதிரடி கால்பந்து வீரர் லியோனல் ஆண்ரே மெஸ்ஸி. இவர் உலக அளவில் பெருமை வாய்ந்த கால்பந்தாட்ட வீரர். இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த ஆண்டு ஃபிபா கால்பந்து போட்டிகள் கத்தார் நாட்டில் நடைபெற்று வருகின்றது.
இதில் அர்ஜெண்டினா சவூதி அரேபியா அணிகள் மோதிய முதல் போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் சவூதி அரேபியா வெற்றி பெற்றது. சவூதி அரேபியா 50வது இடத்தில் இருக்கும் ஓரு நாடு கால்பந்து போட்டிகளில் முதல் மூன்று இடத்தில் இருப்பது அர்ஜெண்டினா இந்த அணியை வீழ்த்தியதை சவூதி அரேபியா மாபெரும் வெற்றியாக கொண்டாடி தீர்த்தது.

இந்த வெற்றிக்கு சவூதி முழுவதும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு கொண்டாடப்பட்டது. மேலும், அந்நாட்டு மன்னர் சவூதி கால்பந்தாட்ட வீரர் ஓவ்வொருவருக்கும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள காரை பரிசாக வழங்க திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், அடுத்த போட்டியில் அர்ஜெண்டினா அணி வெற்றி பெற்றால் மட்டுமே இறுதி போட்டிக்கு தகுதி பெற முடியும் என்ற நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் அர்ஜெண்டினா அணிக்கும் மெக்சிகோ அணிக்கும் போட்டிகள் பரப்பரப்பாக நடைபெற்றது.
அப்போது அர்ஜென்டினா அணியின் மெஸ்ஸி ஆட்டத்தின் 64-வது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார். இதனையடுத்து ஆட்டத்தின் 87-வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணியின் பெர்னான்டெஸ், தனது அணிக்காக இரண்டாவது கோலை அடித்து அசத்தினார்.
இதனால், அர்ஜென்டினா அணி 2-0 என்ற கோல் கணக்கில் அதிரடி வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியில் கோல் அடித்ததன் மூலம் மெஸ்ஸி உலக கோப்பை வரலாற்றில் தனது 8-வது கோலை பதிவு செய்தார்.இந்த வெற்றிக்கு பின்னர் உடைமாற்றும் அறையில் வீரர்கள் பாட்டு பாடி, நடனம் ஆடி மகிழ்ச்சியை கொண்டாடினர்.ஆனால், மெஸ்சி செய்த விசயம் மெக்சிகோவின் குத்து சண்டை வீரர் கேனலோ ஆல்வாரெஜ்ஜுக்கு ஆத்திரம் கிளப்பி உள்ளது.
இதுபற்றி ஆல்வாரெஜ் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், நமது ஜெர்சியை பயன்படுத்தி மெஸ்சி தரையை துடைத்துள்ளார். இதனை பார்த்தீர்களா நண்பர்களே? மெஸ்சியை நான் எங்கேயாவது பார்த்தேன் என்றால், அவரை வாகனம் ஏற்றி கொன்று விடவேண்டாம் என்று அவர் கடவுளிடம் வேண்டி கொள்ளட்டும் என மிரட்டலாக தெரிவித்து உள்ளார்.
இதையும் படியுங்கள்: சர்வதேச சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வரும் ஓட்டக சவாரி
மெஸ்சியின் அந்தஸ்துக்கு அவர், மெக்சிகோவின் கொடி மற்றும் சட்டையை மதிக்க வேண்டும். அர்ஜென்டினாவை நான் மதிப்பதுபோல், மெக்சிகோவை அவர் மதிக்க வேண்டும் என தெரிவித்து உள்ளார்.
இது போன்ற செய்திகளை பெற தலதமிழ் இணையதளத்தை நாடுங்கள்.