பிரம்மாஸ்திரா ரன்பீா் கபூா் மற்றும் ஆலியா பட் இந்தியில் நடித்து வெளியான படம் பிரம்மாஸ்திரா. ரன்பீா் கபூா், ஆலியா பட் இருவரும் திருமணத்திற்குப் பிறகு இணைந்து நடித்த படம் இதுவாகும்.இப்படம் சிவனின் வரலாற்றை குறிக்கும் படமாக அமைந்திருக்கிறது. இப்படம் ஹிந்தியில் இயக்கப்பட்டு அனைத்து மொழிகளிலும் மொழி பெயா்க்கப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது.
இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படம் வெளியான முதல் நாளிலிருந்தே வசூல் மழை பொழிந்து வருகிறது. உலகம் முழுவதிலும் வெள்ளிக்கிழமை 75 கோடியும் சனிக்கிழமை 85 கோடியும் ஞாயிற்றுக்கிழமை 65 கோடியும் வசூலித்ததாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நான்காம் நாள் தி்ங்கள்கிழமையான நேற்று ஹிந்தி பட வசூல் 14.25 கோடியாகவும் மற்ற மொழிகளில் வசூல் 2 கோடியாகவும் உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தை தா்மா புரொடக்ஷ்ன்ஸ் தயாாித்துள்ளது. அயன் முகா்ஜி அவா்கள் இயக்கியுள்ளார்.
இந்த வார இறுதிக்குள் பிரம்மாஸ்திரா திரைப்படம் 225 கோடி வசூலை எட்டும் என இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான தா்மா புரொடக்ஷ்ன்ஸ் தெரிவித்துள்ளது.பிரம்மாஸ்திரா ஐந்தாவது பெரிய வசூல் சாதனை படமாக பாலிவுட்டில் பதிவாகியுள்ளது. இதற்கு முன்பு வெளியான பத்மாவத், தூம் 3, சுல்தான், தில்வாலே, தங்கல் படங்களுக்கு பிறகு பிரம்மாஸ்திரா திரைப்படம் பொிய வசூல் சாதனை படமாக பதிவாகி வருகிறது. நான்காம் நாளான நேற்று இப்படம் பாக்ஸ் ஆபிஸில் பொிய வெற்றி பெற்றுள்ளது.