இலவசங்களை கொடுக்காதீர் என்று உத்திரவிட முடியாது- உயர்நீதி மன்றம்

0
14

இலவசங்களை கொடுக்காதீர் என்று இந்தியா போன்றதொரு நாட்டில் உத்திரவிட முடியாது என்று உயர்நீதி மன்றம் கூறியுள்ளது.

அரசியல் கட்சிகள் தேர்தல் நேரங்களில் இலவச அறிவிப்புகளை அறிவிப்பதும், வழங்குவதும் தீவிரமாக பரீசீலிக்க வேண்டியது. இலவசங்களை அறிவிக்கும் கட்சிகளின் பதிவை நீக்குவது ஜனநாயக விரோத செயல் என்பதால் அதனை பரீசிலிக்க வேண்டும். மேலும், இந்தியா போன்றதொரு நாட்டில் இலவசங்களை கொடுக்காதீர் என்று உத்திரவிட முடியாது என்று திட்டவட்டமாக உயர்நீதி மன்றம் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் சுயநல அரசியல் செய்பவர்கள் தான் இலவச பெட்ரோல், டீசல் போன்ற திட்டங்களை அறிவிப்பார்கள். இதனால், நாடு தன்னிறைவு பெறாது என பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.

இலவசங்களை கொடுக்காதீர் என்று உத்திரவிட முடியாது- உயர்நீதி மன்றம்

சுயநலம் கொண்ட இலவச அறிவிப்புகள் நேர்மையான வரி செலுத்துவோருக்கு சுமையை அதிகரிப்பதுடன், புதிய தொழில்நுட்பங்களில் முதலீடுகளையும் தடுக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

சுயநல அரசியலில் ஈடுபடுபவர்கள் யார் வேண்டுமானாலும் வந்து இலவசமாக பெட்ரோல், டீசல் அறிவிக்கலாம். இத்தகைய நடவடிக்கைகள், நமது குழந்தைகளிடம் இருந்து உரிமைகளை பறிப்பதுடன், நாடு தன்னிறைவு பெறுவதை தடுக்கும். நேர்மையாக வரி செலுத்துபவர்கள் மீது சுமையை ஏற்றிவிடும். புதிய தொழில்நுட்பங்களில் முதலீடுகளையும் தடுக்கும். நாடு எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண தெளிவான நோக்கம் மற்றும் உறுதிப்பாடு தேவை என்றும் கூறியுருந்தார்.

மேலும், உயர்நீதி மன்றம் மக்கள் நலதிட்டங்களுக்கும் இலவசங்களுக்கும் வேறுபாடு உள்ளது. அரசு வழங்கும் இலவசங்கள் பல நேரங்களில் உயிர் காக்கும் அம்சங்களாக உள்ளன. இலவசங்களை கொடுக்கும் திட்டங்களை வரைப்படுத்துவதை ஓன்றிய அரசு தான் சட்டம் இயற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here