பழனியில் வைகாசி விசாகப் பெருவிழா தேரோட்டம் சீறும் சிறப்புடனும் நடந்தது. அறுபடை வீடுகளில் மூன்றாவதாக காணப்படும் பழனியில் முருகப்பெருமானுக்கு பால் காவடி, பன்னீர் காவடி, மயில் காவடி, புஷ்ப காவடி, இளநீர் காவடி என பக்தர்கள் காவடி எடுத்து தன் நேர்த்தி கடனை செலுத்தினர்.
முருகப்பெருமான் பிறந்த நாளான வைகாசி விசாகம் பார்க்கப்படுகிறது. அதனால் அத்தினத்தில் பக்தர்கள் முருகனை நினைத்து விரதமிருந்து வந்து தரிசனம் செய்வது வழக்கம். அப்படி வழிப்பட்டால் துன்பம் நீங்கி இன்பம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

பழனி முருகன் கோவிலின் உபபோவிலில் பெரியநாகி அம்மன் தலத்தில் வைகாசி விசாக ஜூன் 6 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஜூன் 15 தேதி வரை என 10 நாட்கள் நடக்கும் இத்திருவிழாவில் 6 ஆம் நாளான ஜூன் 11 அன்று முத்துக்குமாரசாமி, வள்ளி- தெய்வானைக்கு திருக்கல்யாணம் சிறப்பாக நடந்தது. தேரோட்டம் மாலை 4.30 க்கு தொடங்கியது. தேரில் முத்துக்குமாரசாமி வளிளி தெய்வானை எழந்தருளினர். பக்தர்கள் அவர்களை வணங்கி ‘அரோகரா அரோகாரா’ என முழக்கமிட்டு தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.
தேரானது நான்கு ரத வீதிகளிலும் சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார் எம்பெருமான் கோயில் யானை கஸ்தூரியும் தன் பங்கிற்கு தேரினை முட்டி தள்ளியது. மாலை 5.23 க்கு நிலையை வந்தடைந்தது. சிறப்பு ஆராதனைகள் செய்யப்பட்டது பக்தர்களுக்கு பிராசதம் வழங்கப்பட்டது. இதை தொடர்நது இரவு தந்த பல்லக்கில் வீற்றிருந்தருளி முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருளினை வழங்கினார்.
விழாவினை கோவில் நிர்வாகம் சிறப்பாக செய்து கொடுத்தது பக்தர்களும் நன்றாக இறைவனை தரிசித்தனர்.