அதிமுக அலுவலக மோதல் தொடர்பாக 400 பேர் மீது வழக்கு பதிவு

0
4

அதிமுக அலுவலக மோதல் தொடர்பாக 400 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது காவல் துறை.

அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்த மோதல் தொடர்பாக 400 பேர் மீது போலிசார் வழக்குப்பதிவு. மோதலில் காயம் உதவி ஆய்வாளர் அடைந்த காசி பாண்டி அளித்த புகாரின் பெயரில், 200 இ.பி.எஸ் ஆதரவாளர்கள், 200 ஓ.பி.எஸ் ஆதரவாளர்களின் மீது வழங்குப் பதிந்துள்ளது ராயப்பேட்டை காவல் துறை.

இந்நிலையில், அதிமுக தலைமைகத்தில் நடந்த மோதல் காரணமாக வட்டாட்சியர் உத்தரவின் பேரில் காவல் துறை உதவியுடன் சீல் வைத்து மூடப்பட்டது. மேலும், அதிமுக கட்சி அலுவலகம் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை முடிவுசெய்ய இருதரப்பினரும் தாமாகவோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ வரும் 25ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று இருதரப்பினருக்கும் வருவாய்துறை நோட்டீஸ் வழங்கியுள்ளது.

அதிமுக அலுவலக மோதல் தொடர்பாக 400 பேர் மீது வழக்கு பதிவு

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், (11.07.2022) காலை சுமார் 8.30 மணியளவில் E-2 ராயப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்திற்கு ஒரு பிரிவினர் சென்றபோது. அங்கிருந்த மற்றொரு பிரிவினர் கட்சி தலைமை அலுவலகத்தில் நுழையவிடாமல் தடுத்துள்ளனர். இதனால் இருதரப்பினரும் ஆயுதங்களுடன் கலவரத்தில் ஈடுபட்டு , கற்களையும் எறிந்து தாக்குதலில் ஈடுபட்டனர்.

காவல்துறையினரை பணி செய்யாவிடாமல் தடுத்ததுடன். அவ்வை சண்முகம் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு தனியார் பேருந்துகள் மற்றும் கார்களை சேதப்படுத்தினர். இதுதொடர்பாக, பாசறை பாலசந்திரன் என்பவர் 13 நபர்களுடன் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்தபோது போலீசார் அவர்களை கைது செய்து காவல்துறையினர் அவ்விடத்தில் நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

மேற்படி தாக்குதல் சம்பவத்தில் ஒரு தரப்பில் 24 நபர்களும் , மற்றொரு தரப்பில் 20 நபர்களும் காயமடைந்தனர். மேலும் காவல் துறையைச்சேர்ந்த 2 நபர்களும், ஒரு தனி நபர் என மொத்தம் 47 நபர்கள் காயமடைந்தனர் , காயமடைந்தவர்கள் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை , ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனை. கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, காவேரி மருத்துவனை ஆகிய இடங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here