குழந்தைகளைத் தாக்கும் தக்காளி காய்ச்சல் மத்திய சுகாதர நிறுவனம் வழிகாட்டு நெறி முறைகளை வெளியிட்டுள்ளது.
இந்திய நாட்டில் இதுவரை 80 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இக்காய்ச்சல் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மாநில அரசுகளை மத்திய அரசு கவனமுடனும் எச்சரிக்கையுடனும் இதை எதிர் கொள்ள வேண்டும் என்பதையும் கூறியுள்ளது.
தக்காளி காய்ச்சலை கட்டுப்படுத்தவும் மாநில அரசுக்கு தெரிவித்துள்ளது. மேலும் இத்தக்காளி காய்ச்சலை பற்றிய விழிப்புணர்வையும் குழந்தைகள் மற்றும் பொது மக்களிடம் அறிவுறுத்தவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
தக்காளி காய்ச்சல் என்று அழைக்கப்படும் நோய், கேரளாவில் கடந்த மே மாதம் 6-ம் தேதி உறுதிசெய்யப்பட்டது. இதுவரை நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் 82-க்கு மேற்பட்டகுழந்தைகளுக்கு பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ள மத்திய சுகாதார அமைச்சகம், நாடு முழுவதும் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.

இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டலில், “ தக்காளி காயச்சல் வைரஸ் மற்ற வைரஸ் தொற்றுகள் போன்ற அறிகுறிகளைக் காட்டினாலும், கொரோனா, குரங்கம்மை, டெங்கு அல்லது சிக்கன் குனியாவுடன் தொடர்புடையது அல்ல எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெரிந்து கொள்ளக: கொரோனா தொற்றிலிருந்து தற்காத்து கொள்வது எப்படி?
இந்த வைரசுக்கு இன்னும் மருந்துகள் கண்டுபிடிக்கபடாமல் இருப்பதாலும் இது 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளையே வெகுவாக பாதிக்கிறது என்பதாலும் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியமாகிறது.
அறிகுறிகள்:
- அதிக காய்ச்சல், உடல் வலி, மூட்டு வலி, உடல் சோர்வு.
- வாந்தி, குமட்டல், வயிற்றுப்போக்கு, நீர்போக்கு பிரச்சனைகள்.
- மூட்டுகளில் வீக்கம், உடல்களில் வீக்கம்.
- குழந்தைகளுக்கு உடலில் சொறி சுரங்கு போன்று காணப்படுதல்
தக்காளி காய்ச்சலை கட்டுப்படுத்த கேரள மாநில எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் இதை எதிர்த்து போராட தமிழகத்தில் 27 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது என்று தமிழக சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.