மைசூர் தசராவில் யானை மீது சாமுண்டீஸ்வரி அருள் காட்சி

0
9

மைசூர்: உலக பெற்ற மைசூர் தசரா திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகின்றது. அதன் ஓரு பகுதியான நிறைவு விழாவான இன்று யானை மீது சாமுண்டீஸ்வரி அம்மன் தங்க அம்பாரியில் பிரசவிக்கும் நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது.

அலங்கார யானை சுமந்து வந்த 750 கிலோ தங்க அம்பாரி மீது வீற்றிருக்கும் சாமுண்டீஸ்வரிக்கு, கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை மலர் தூவி வழிபாடு செய்தார். மக்கள் வெள்ளத்தில் மூழ்கிய மைசூரில் பண்பாடு, கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையில் அலங்கார ஊர்திகள் ஊர்வலம் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கானோர் மைசூர் தசரா திருவிழாவை கண்டு களித்தனர்.

உலக புகழ்பெற்ற மைசூர் தசரா திருவிழா ஆண்டுதோறும் நவராத்திரி தொடங்கும் அன்று அதாவது கடந்த 26ம் தேதி வெகு விமர்சையாக இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வந்து கொடியேற்றத்தை தொடங்கி வைத்தார். இந்த விழாவானது 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.

மைசூர் தசராவில் யானை மீது சாமுண்டீஸ்வரி அருள் காட்சி

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்றால் இவ்விழா நிறுத்தப்பட்டது. இந்த ஆண்டு தசரா விழாவினை நடத்த அனுமதி அளித்தால் பக்தர்கள் அனைவரும் இதனை வெகு சிறப்பாக கொண்டாடி அம்மனை வழிபட்டு தங்கள் நேர்த்தி கடனை செலுத்தி அம்மன் அருளை வேண்டி சென்றனர்.

இதையும் கவனியுங்கள்: குலசை தசரா விழாவின் சூரசம்ஹார நிகழ்வு விமர்சையாக நடந்தது

இந்த தசரா திருவிழாவால் மைசூர் நகரமே விழாக் கோலம் பூண்டது குறிப்பிடத்தக்கது. வண்ண வண்ண விலக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெருக்களாக காணப்பட்டது. உலகம் முழுவதிலும் இருந்தும் பக்தர்கள் வந்து தரிசனம் செய்து வந்தனர்.

மைசூரு தசரா திருவிழா இந்திய கலாசாரத்தின் உயர்வையும், பெருமிதத்தையும் வெளிப்படுத்தக்கூடியதாக இருக்கிறது. இரக்கமும் தியாகமும் கொண்ட தேவியான துர்கை, அநீதியை அழிக்கக்கூடியவள். அப்படிப்பட்ட தேவியை நவதுர்கையாக வழிபடுவதே நவராத்திரியின் சிறப்பு.

திருவிழாவை முன்னிட்டு மைசூரில் 290 கலாசார நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும், உணவுத் திருவிழா, மலர் கண்காட்சி, குழந்தைகள் தசரா, இளைஞர்கள் தசரா, பெண்கள் தசரா, விவசாயிகள் தசரா போன்றவையும் வெகு மக்களை கவர்ந்தது.

இது போன்ற பல்வேறு தகவல்களை அறிய தலதமிழ் இணையதளத்தை நாடுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here