விரைவில் சந்திரமுகி 2 திரைப்படம் லைகா நிறுவனம் அறிவிப்பு

0
14

விரைவில் சந்திரமுகி 2 திரைப்படம் லைகா நிறுவனம் அறிவிப்பு. 2005 ஆண்டு சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான திரைப்படம் சந்திரமுகி தமிழகமெங்கும் 800 நாட்கள் திரையரங்குகளில் வெளியான படம் என்ற பெருமையையும் அதிக வசூலையும்  பெற்ற திரைப்படம் என்ற பெருமையையும் பெற்றது.

பி.வாசு இயக்கத்தில் ரஜினி, பிரபு, வைகைப்புயல் வடிவேலு, நாசர், ஜோதிகா, நயன்தாரா என திரை உலகத்தை கலக்கிய திரைப்படம் தான் சந்திரமுகி. இப்படத்தின் இசையமைப்பாளர் வித்தியாசாகர். இப்படத்தின் மிகப் பெரும் வெற்றியை தொடர்ந்து சந்திரமுகி 2 பாகம் எடுக்க திட்டமிடப்பட்டது.

விரைவில் சந்திரமுகி 2 திரைப்படம் லைகா நிறுவனம் அறிவிப்பு
விரைவில் சந்திரமுகி 2 திரைப்படம் லைகா நிறுவனம் அறிவிப்பு

இத்திரைப்படம் மலையாளத்தில் மோகன்லால், ஷோபனா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற மணிச்சித்திரத்தாழு படத்தின் ரீமேக். சந்திரமுகியின் இரண்டாம் பாகத்தை பி.வாசு மலையாலத்தில் எடுத்தார் அதுவும் பெரும் வெற்றி பெற்றது. எனவே தமிழில் சந்திரமுகி 2 பாகத்தை எடுக்க நடிகர் ரஜினியிடம் தெரிவிக்கப்பட்டது. அவர் அதற்கு விருப்பமில்லை என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அதனை தொடர்ந்து லைக்கா நிறுவனம் சந்திரமுகி 2 ம் பாகத்தை தயாரிக்க முடிவு செய்தது. இந்நிலையில் படத்தின் பெயரை பெறுவதற்காக சிவாஜி நிறுவனத்திற்கு 1 கோடி தரப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

நடிகர் ராகவா லாரன்ஸ் இப்படத்தின் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். நகைச்சுவைக்கு வடிவேலுவும், RRR மற்றும் பாகுபலி ஆகிய படங்களின் இசையமைப்பாளரான எம் எம் கீரவாணி இசைக்கிறார். ஆர்.டி ராஜசேகர் ஓளிப்பதிவு செய்கிறார். ஓருங்கிணைப்பு பணிகளை தோட்டா தரணி கவனிக்கிறார்.

படத்தின் பணிகள் இம்மாதமே தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராகவா லாரன்ஸின் அடுத்த படமான கதிரேசன் தயாரிப்பில் ரூத்திரன் ஆக்ஷ்ன் என்டடேயினாக இருக்கும் இப்படம் 2023 ஜனவரியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here