இந்திய வீராங்கனை தீப்தி சர்மா தகவலுக்கு சார்லி டீன் மறுப்பு

0
8

இந்திய வீராங்கனை தீப்தி சர்மா தகவலுக்கு சார்லி டீன் மறுப்பு. இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய மகளிர் அணியினர். 3 தொடர்களில் இடம் பெற்று 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியுள்ளனர். 

கடந்த சனிக்கிழமை இங்கிலாந்தின் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடின. இதில் இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து வீராங்கனை சார்லி டீனை ‘மன்கட்’ முறையில் நான்-ஸ்ட்ரைக்கில் எண்டில் பந்து வீசுவதற்கு முன்னர் அவுட் செய்திருந்தார் தீப்தி. அது சர்ச்சையானது.

கிரிக்கெட் வல்லுநர்கள் பலரும் அது குறித்து தங்களது கருத்துகளை சொல்லி வந்த நிலையில் இந்த சர்ச்சையில் தொடர்புடைய தீப்தி சர்மா தனது கருத்தை தெரிவித்தார். இது குறித்து சார்லி டீனுக்கு பலமுறை எச்சரிக்கை விடுத்ததாகவும் அம்பயரிடம் தெரிவித்துள்ளதாகவும் கூறியிருந்தார்.

இந்திய வீராங்கனை தீப்தி சர்மா தகவலுக்கு சார்லி டீன் மறுப்பு

இந்நிலையில், இங்கிலாந்து கேப்டன் ஹெதர் நைட் காயம் காரணமாக அந்த தொடரில் இடம் பெறவில்லை. அவருக்கு பதிலாக எமி ஜோன்ஸ் கேப்டனாக இருந்தார். இது குறித்து டிவிட்டரில் தீப்தி சர்மாவின் பேட்டிக்கு மறுப்பு தெரிவித்து கூறியுள்ளார். தொடர் முடிந்தது இந்தியா வெற்றி பெற்று விட்டது. ஆனால், தீப்தி சர்மா எவ்வித எச்சரிக்கையும் தரவில்லை என்றும் விதிமுறைக்குட்பட்ட செயலுக்கு எச்சரிக்கை தேவையில்லை என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த மன்கட் முறை அவுட்டிற்கு நான்-ஸ்ட்ரைக்கர் எண்டில் இருக்கும்போது பேட் செய்பவர்தான் விழிப்புடன் இருக்க வேண்டும் என கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் ஓய்வதற்குள்ளாகவே அடுத்த விவகாரம் ஒன்று கிளம்பியிருக்கிறது. இந்திய வீராங்கனை தானியா பாட்டியா தனது ட்விட்டர் பக்கத்தில், “இங்கிலாந்து கிரிக்கெட் தொடருக்காக நாங்கள் லண்டனில் உள்ள ஹோட்டலில் சமீபத்தில் தங்கியிருந்தோம். அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் எனது அறைக்குள் நுழைந்து, நான் வைத்திருந்த பேக், பணம், கார்டு, நகை மற்றும் வாட்ச்சுகள் ஆகியவற்றை திருடிச்சென்று விட்டார்.

ஹோட்டல் நிர்வாகத்தின் கவனக்குறைவு எனக்கு அதிர்ச்சியாகவும், ஏமாற்றமாகவும் இருக்கிறது. இது போன்ற பாதுகாப்பு குறைபாடு உள்ள ஹோட்டலுக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முன்னுரிமை அளித்திருப்பது வியப்பளிக்கிறது. விரைவில் விசாரணை நடத்தி திருட்டு போன எனது பொருள்களை மீட்டு தருவார்கள் என்று நம்புகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த ஹோட்டல் நிர்வாகம், “இந்த தகவல் எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது. ஓட்டலில் தங்கியிருந்த நாள் மற்றும் விவரங்களை இ-மெயில் மூலம் அனுப்புங்கள்.நாங்கள் உரிய நடவடிக்கை எடுக்கிறோம்” என குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here