செஸ் ஓலிம்பியாட் போட்டி கோலாகலமாக நிறைவடைந்தது

0
12

செஸ் ஓலிம்பியாட் மாமல்லபுரத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்றுடன் மிக பிரம்மாண்டமான கலை நிகழ்ச்சியுடன் சிறப்பாக நிறைவடைந்தது.

44வது செஸ் ஓலிம்பியாட் முதன் முதலாக இந்தியாவில் நடைபெற்றது. அதிலும் தமிழ்நாட்டில் மாமல்லபுரத்தில் வெகு சிறப்பான முறையில் உலக செஸ் தலைவர்களே மெச்சும் அளவில் அனைத்தும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இதில் 86 நாடுகளை சேர்ந்த 2000 க்கும் மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கு கொண்டனர்.

இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் இந்தியா சார்பில் மொத்தம் ஆறு அணிகள் களமிறங்கின. இந்திய அணிகளில் குறைந்தது ஒரு அணியாவது பதக்கம் வெல்லும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. இதில் இந்தியவின் சார்பில் போட்டியிட்ட பலர் வெற்றி பெற்றனர்.

செஸ் ஓலிம்பியாட் போட்டி கோலாகலமாக நிறைவடைந்தது

இதனைத் தொடர்ந்து செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்றது.

நிறைவு விழா மேடையில் தமிழக முன்னாள் முதல்வர்களான ராஜாஜி, காமராஜர், அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரது படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் இடம் பெற்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை கவர்ந்தது. இதனைத் தொடர்ந்து செஸ் ஒலிம்பியாட் தொடர்பான வீடியோ ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இதில் செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான தொடக்க பணிகள் தொடங்கி செய்யப்பட்ட பல்வேறு ஏற்பாடுகள் வரை அனைத்து தகவல்களும் வீடியோவாக ஒளிபரப்பப்பட்டன. இந்த வீடியோவின் இறுதியில் செஸ் ஒலிம்பியாட் நாயகன் “தம்பி” அனைவருக்கும் நன்றி தெரிவித்து பிரியாவிடை கொடுத்தார்.

இதுமட்டுமல்லாமல், இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் டிரம்ஸ் சிவமணி, வீணை இசைக் கலைஞர் ராஜேஷ் வைத்தியா, கீ போர்டு ஸ்டீபன் தேவசி, புல்லாங்குழல் இசைக் கலைஞர் நவீன் ஆகியோர் இணைந்து பல பாடல்களை இசைத்தனர்.

விழாவின் இடையே, கமல்ஹாசனின் குரலில் அரங்கேறிய தமிழ் மண்ணின் வரலாற்றுக் கதை, பார்வையாளர்கள் அனைவருக்கும் மயிற்கூச்செரிய வைத்தது. அசத்தலான கமலின் குரலில், நாடகங்களும், நடிப்பும் என கலைஞர் அசத்தினர்.

இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை நிகழ்த்தினார். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று கனியன் பூங்குன்றனாரின் வரிகளோடு உரையைத் தொடங்கிய அவர், விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்த உதயநிதி ஸ்டாலின் மற்றும் விக்னேஷ் சிவனுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகளையும் முதலமைச்சர் வெளியிட்டார். செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெற்றிபெற்ற அனைவருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பதக்கங்களை வழங்கினார். இறுதியாக, தேசிய கீதத்துடன் செஸ் ஒலிம்பியாட் 2022 நிறைவு விழா கோலாகலமாக முடிவடைந்தது.

செய்திகள், ஆன்மீகம், ஜோதிடம் தொடர்பான செய்திகளை அறிந்து கொள்ள தலதமிழ் இணையத்தை அனுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here