அசுத்தமான ஆறுகளின் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தது சென்னையில் உள்ள கூவம் ஆறு இந்தியாவில் உள்ள ஆறுகளில் அசுத்தமான ஆறாக கூவம் ஆறு இருப்பதாக அறிக்கை தாக்கல்.
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை மாநகரத்திற்கு மெரினா கடற்கரை, புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை விமான நிலையம் போன்று கூவமும் சென்னையின் அடையாளமாக திகழ்ந்தது ஓரு காலத்தில் ஆனால், இப்போதைய நிலையோ அசுத்தம் நிறைந்த சாக்கடை கழிவுகளின் உச்சமாக மாறி மக்களின் முகம் சுழிக்க வைக்கிறது.
இந்தியாவில் உள்ள 28 மாநிலங்கள் 7 யூனியன் பிரதேசங்களில் உள்ள ஆறுகளின் பட்டியலை கொண்டு அந்த ஆறுகளின் தரமதிப்பீட்டை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொண்டது. அதில் அதிகளவு மாசு நிறைந்த ஆறாக கூவம் உள்ளதை அறிக்கையாக சமர்பித்துள்ளது.

311 ஆறுகளில் 4,000-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த ஆய்வானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. பயாலஜிக்கல் ஆக்சிஜன் டிமாண்ட் (Biochemical oxygen demand ) என்ற ஆய்வு முறையில் இந்த ஆய்வானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி ஒரு நதியில் இருந்து எடுக்கப்படும் 1 லிட்டர் தண்ணீர் தூய்மையான தண்ணீராக மாற தேவைப்படும் ஆக்சிஜனின் அளவைப் பொறுத்து இந்த BOD கணக்கீடு செய்யப்படுகிறது.
கூவம் ஆற்றில், அடையாறில் இருந்து சத்யா நகர் வரை உள்ள வழித்தடத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு லிட்டர் தண்ணீர் தூய தண்ணீராக மாற 345 மில்லி கிராம் ஆக்சிஜன் தேவைப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக குஜராத் மாநிலத்தில் உள்ள சபர்மதி ஆறு மற்றும் உத்திரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள பகிலா ஆறு மிகவும் மாசடைந்த ஆறாக கண்டறியப்பட்டுள்ளது.
சபர்மதி ஆற்றில் ஒரு லிட்டர் தண்ணீர் தூய தண்ணீராக மாற 292 மில்லி கிராம் ஆக்ஸிஜனும், பகிலா ஆற்றில் ஒரு லிட்டர் தண்ணீர் தூய தண்ணீராக மாற 287 மில்லி கிராம் ஆக்ஸிஜனும் தேவைப்படுவதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தில் பாயும் அடையாறு, அமராவதி, பவானி ஆறு, காவிரி ஆறு, பாலாறு, தாமிரபரணி ஆறு, மணிமுத்தாறு உள்ளிட்ட நதிகளும் மாசடைந்து உள்ளதாகவும் அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: இந்தியாவிலேயே முதன் முறையாக சென்னை ஏர்போட்டில் திரையரங்கு திறப்பு
இது போன்ற தகவல்களுக்கு தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.