சென்னை மைசூர் இடையே வந்தே பாரத் ரயில்

0
27

சென்னை மைசூர் இடையே வந்தே பாரத் ரயில் நாட்டின் 5வது வந்தே பாரத் ரயில் சென்னையில் நவம்பர் 10ல் தொடங்கி வைக்கப்படுகின்றது. 

இந்திய நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் ரயில் துறை என்றால் அது மிகையாகாது. ரயில் பயணங்கள் மூலம் எண்ணற்ற வர்த்தக ரீதியாகவும் பொது மக்களும் பயன் பெற்று வருகின்றனர். பொருளாதார ரீதியிலும் அது மிகவும் ஏற்புடையதாக உள்ளது. அனைத்து இடங்களுக்கும் பேருந்தை நம்பி இருக்க முடியாது. அதிலும் வெகு தூரம் பயணிக்கும் இடங்களுக்கு பேருந்திர்க்கு அடுத்தப்படியாக இருப்பது ரயில் பயணமே.

விரைவாக ஓரு இடத்திற்கு செல்லவும் பயணம் சிறப்புடையதாகவும் உடல் அசதி இல்லாமலும் பயணிக்கவும் பயனுடையதாக விளங்குவது ரயில். தற்போது ரயில் துறையில் பலவித மாற்றங்களை ஏற்படுத்தி ரயிலில் எண்ணற்ற வசதிகளையும் விரைவில் தொலைவில் பயணிக்கவும் காலத்திற்கேற்ப ரயிலில் புதிய சேவையை ஏற்படுத்தி வருகின்றது இந்திய அரசாங்கமும் ரயில்வே துறையும்.

சென்னை மைசூர் இடையே வந்தே பாரத் ரயில்

அந்த வகையில், வந்தே பாரத் திட்டம் மூலம் பலமயில் தூரத்தையும் விரைவாக சென்று விட இத்திட்டம் பயனுள்ளதாக அமைந்துள்ளது. சமீப காலம் வரை இதுவரை நான்கு வந்தே பாரத் ரயில்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் பாரத பிரதமர் மோடி சமீபத்தில் 3வது மற்றும் 4வது வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைத்தார். குஜராத்தில் காந்தி நகர் முதல் மும்பை இடையே 3வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலையும், இமாச்சலப்பிரதேசத்தின் உனா முதல் டெல்லி வரை 4வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலையும் பிரதமர் மோடி கடந்த வாரத்தில் தொடங்கி வைத்தார்.

இதன் மூலம் டெல்லி மற்றும் சண்டிகர் இடையிலான தொலைவு 3மணிநேரமாகக் குறைகிறது. உனா முதல் டெல்லி இடையிலான பயண நேரம் 2மணிநேரம் குறைகிறது. புதிதாக வடிவமைக்கப்பட்ட வந்தே பாரத் 2.0 ரயில்கள் முன்பு இருந்த ரயிலை விட மேம்படுத்தப்பட்டவை. குறைவான நேரத்தில் அதிகமான வேகத்தை எட்டும் வகையில் வந்தே பாரத் ரயில் அமைக்கப்பட்டுள்ளது.

இது தவிர ரயில்கள் மோதுவதை தவிர்க்கும் தொழில்நுட்பமான டிசிஏஎஸ் முறை அதாவது கவாச் முறைய இதில் செயல்படுத்தப்படுகிறது. திடீரென ஏதாவது கோளாறு ஏற்பட்டால், 3 மணிநேரம் வரை பெட்டிகளில் மின்சாரம் கிடைக்கும் வகையில் பேக்அப் பேட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளன.

ரயில்களில் உள்புறமும் வெளிப்புறமும் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. உதவியாளரை அழைக்க சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. தற்போது, சென்னையிலிருந்து பெங்களூர் நின்று மைசூர் வரை செல்லும் வந்தே பாரத் ரயிலை நவம்பர் 10ல் தொடங்கி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here