ஐபிஎல் 2023 ஆம் ஆண்டுக்கான மினி ஏலம் கொச்சியில் இன்று நடைபெற்று வந்தது. அதில் சென்னை அணியின் சார்பில் முக்கிய வீரர்களை வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருந்து வந்தது. ஏனெனில் கடந்த ஐபிஎல் சீசனில் சிஎஸ்கேவால் சிறப்பாக செயல்பட முடியவில்லை. அதற்காக பல மாற்றங்களை அணியில் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்து வந்தது.
இதுவரை ஐபிஎல் போட்டியில் தோனி தலைமையிலான தொடரில் 4 முறை கோப்பையை வென்று அதிக முறை கோப்பையை வென்று 2ம் இடத்தில் இருந்து வருகிறது. முதல் இடத்தை மும்பை இந்தியன்ஸ் 5 முறை கோப்பையை வென்றுள்ளது.
தற்போது, சென்னை அணியில் பல முன்னணி வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் நல்ல திறமையான வீரர்களை வாங்க வேண்டும். எனவே, அனைவரும் எதிர்பார்த்திருந்த சென்னை அணியின் குட்டி சிங்கமாக செயல்பட்ட சாம் கர்ரனை எடுக்கும் என்று எல்லோரும் எதிர்பார்த்த நிலையில் அவருக்கு அதிகமான போட்டி நிலவியதால் அவரை விட குறைவான சிறப்பான ஆல்ரவுன்டரான இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸை 16.25 கோடிக்கு வாங்கியுள்ளது.

அடுத்ததாக நியூசிலாந்தின் வேகபந்து வீச்சாளரான கெயில் ஜெமிசனை 1.50 கோடிக்கு வாங்கியது. கடந்த ஐபிஎல்லில் ஆர்சிபி இவரை 15 கோடி செலவிட்டு வாங்கியிருந்த நிலையில் தற்போது குறைந்த செலவில் இவரை வாங்கியுள்ளது. இவர் நல்ல பவுலராகவும் லொ ஆர்டரில் நல்ல பேட்டராகவும் இருப்பார்.
பின்னர், மீதமுள்ள பணத்திற்கு குறைந்த அளவில் செலவு செய்து நல்ல திறைமையான ஆட்டத்தை வெளிப்படுத்த வரும் இளம் வீரர்களான ஐதராபாத்தை சேர்ந்த 18 வயது வீரரான ஷாயிக் ரஷித் , அண்டர் 19 உலககோப்பையில் இந்திய அணியின் துணை கேப்டன் பொறுப்பையும் கேப்டன் பொறுப்பை ஏற்று நடத்தினார்.
இந்நிலையில் இவரை 20 லட்சத்திற்கு வாங்கியுள்ளது.
இவரை தொடர்ந்து நிசாந்த் சிந்து என்பவரை 60 லட்சம் செலவு செய்து வாங்கியுள்ளது. இவர் தோனியிடம் பயிற்சி பெற்றவர் வருங்கால சிஎஸ்கேவிற்கு பக்கபலமாக இருந்து உயர்த்துவார் என்ற நோக்கிலும் அண்டர் 19 உலக கோப்பை போட்டியில் சதம் விளாசியதுடன் பவுலிங்கிலும் மிரட்டினார்.
தற்போது ரஞ்சி கோப்பையிலும் பரோடாவுக்கு எதிராக சதம் மற்றும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். ஹரி நிசாந்தின் பந்துவீச்சும் சிஎஸ்கே வின் ஆடுகளத்திற்கு சிறப்பாக உதவும். இதன் மூலம் 2 இளம் வீரர்களை மொத்தமே 80 லட்சம் ரூபாய் செலவு செய்து சிஎஸ்கே ஏலத்தில் எடுத்தது தந்திரமாக கருதப்படுகிறது.
இதையும் படியுங்கள்: பென் ஸ்டோக்ஸ் மற்றும் கெயில் ஜெமிசன் ஆகியோரை வாக்கிய சிஎஸ்கே
இது போன்ற தகவல்களுக்கு தலதமிழ் இணையதளத்தை நாடுங்கள்.